உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு

37



ந்தைதாய் மறந்தேன்; வந்துநான் அழுதேன்;
எண்பதியால் ஒண்ணு. ஏந்தும்கொங்கைப் பாலை
நீ, சார்ந்துஉண்ண வாராய் சங்கடங்கள் தீர.
பொன்னினால்தீ வட்டி புடிப்பார்கள் தாதி;
மின்னிய நிமிலிப் பூச்சிவிளக் காச்சே!
பெத்துநான் வளர்த்தேன்; பூமிக்கிரை இட்டேன்;
பொன்னான மேனி மண்ணின்மேல் புரண்டாய்.
தொண்ணுாறுடன் ஒண்ணு. துன்னும்விசுவா மித்திரர்
நான், என்னசெய்வேன் ஐயா, எனக்குரிமை செய்வாய்,
என்றுநான் இருந்தேன்; (இப்படியா ஆச்சே!)
என்உயிரைப் போக்கி உனக்குரிமை செய்வேன்;
பிள்ளையில்லாப் பாவி பெருமலடி ஆனேன்.
விதிவசமும் இதுவோ? விச்வாமித்ரன் மாய்கை.
பிள்ளையாரே வாரீர். பிள்ளையை எடுத்துப்
புலம்பியே நடந்தாள்; இது, முன்செய்த வினையோ?
செந்தணல் அடைக்க வந்தேனே மகனே!
சுடலையி லிருந்த புலையனும் எழுந்தான்;
ஒருபதியால் ஒண்ணு.

ஓடிஅவன் வந்து ஆரடிநீ என்றான்.
என், மைந்தனும் இறந்தான்; தணல்மூட்ட வந்தேன்.
கூலிக்காசு தந்துநீ மூட்டடி தணலை.
வகைஇல்லை என்றாள். மங்கிலியம் கேட்டான்.
வானவர் முனிவர் மகாதேவரும் காணார்;
இருபதியால் ஒண்ணு; என்னுடைய தாலி
இந்தநீசன் கண்டான்—ஐயா—என்னுடைய புருஷன்
காண்பதேயல் லாமல் கண்டவரும் உண்டோ?
அரனயனை நொந்து அழுதவள் புலம்ப
கழுத்திலுந் தாலி காணவும்ஒண் ணாதே.
ஒருபொய்சொல்ல மாட்டாமல் உளம்நொந்து போனார்.
முப்பதியால் ஒண்ணு, முன்செய்த வினையோ?
மன்னவன் மகனே, என்றவள் புலம்ப
மதிதயன் மகளும்—இவர்—மன்னனென் றறிந்து