38
அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு
மயானம்காக்க வந்த வகைஎனக்குச் சொல்லும்;
நாற்பதியால் ஒண்ணு. என், நாயகியை வித்து
நற்பொருள் தரகு சம்பளம்ஆச் சென்றார்;
என்னையேநான் வித்து ரிஷிருணத்தைத் தந்தேன்;
செத்தமா டுரிச்சேன்; சுடலைதனைக் காத்தேன்;
அம்பதியால் ஒண்ணு. அசத்தியம் வராமல்
கால்பணமும்தந்தால் தகனம்செய்து வைப்பேன்.
அழுதுமெள்ளப் போயி மறையவனைக் கேட்டாள்;
கெதியில்லை என்றான், எத்தன்விச்வா மித்திரன்.
காசிமகா ராஜன் பாலனை முறித்து
அறுபதியா லொண்ணு. அழுதவள் வரச்சே,
வழியினிலே போட்டான்...
அவள், ஏங்கியே புலம்பித் தாங்கியே எடுத்தாள்;
தன், மைந்தனைக்காணாமல் மதனவல்லியும் புலம்ப
காசி மகாராஜன்—அந்தக்—கள்ளரையும் புடிக்கத்
தூதர்களை விட்டான். (தூதர்களும் ஓடி)
எழுபதியால் ஒண்ணு. ஏந்திழையைக் கொண்டு
ராஜன்முன்னே விட்டார்; அவள், வாக்குகளைக்
கேட்டார்.
குழந்தைகள் இருக்க—நான்—இல்லைஎன்றால் போமோ?
மயானம் கொண்டுநீங்கள் வீரபாகன் கையால்
சிரந்துணித்து வாரும்; எண்பதியால் ஒண்ணு.
ஏந்திழையை வெட்டிச் சேதியினை அனுப்பும்;
சந்திர மதியைத் தலைகுனியச் சொல்லிச்
சந்திரவா ளாலே தாங்கியவன் ஓங்க
வான்வளரும் தேவர் வந்துகை புடிக்க
என்றன்கை புடிச்ச ஈசனே, சரணம்;
தொண்ணுாறுடன் ஒண்ணு.
உன், துன்பமெல்லாம் போச்சே!—உன்—சீமையுனக்
காச்சே!
சத்தியம் உனக்கே தரணியரிச் சந்த்ரா,
ஒரு, பொய்சொல்ல மாட்டாமல் பொண்டுபுள்ளை
வித்தாய்;