இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அரிச்சந்திரன் ஏற்றப் பாட்டு
39
நீ, புலையனுக் கமர்ந்தாய்; வாய்க்கரிசி தின்னாய்.
இந்த, ராச்சியமே ஆண்டால் நாடுநகை யாதோ?
ஆனகுறை சேரும்; வாரும்அரிச் சந்திரா,
உன்னை, வாங்கினவன் ஏமன். மாண்டுபோன புள்ளை
கலகலென் றெழுந்தான்; களிப்புமிகக் கொண்டார்.
ஈசுவரனும் அம்மன் இந்திரனும் தேவர்
மாயவனும் அம்மன் வசிஷ்டமா முனியும்
அயோத்தியே சென்று அரிச்சந்த்ர ராஜனுக்கும்
சந்திர மதிக்கும் சகலரும் பார்க்கப்
பட்டமே தரிச்சார்; பாரெல்லாம் அளிச்சார்;
மங்களமே பாடி வாழ்த்திச்சேஷை இட்டார்.
சோபனமே பாடித் தெய்வலோகம் போனார்.
இந்தக்கதை கேட்டோர் எல்லாநலம் கொண்டு
பஞ்சபூதம் ஒன்றாய்த் தஞ்சமுடன் வாழ்வார்.