உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு

வாவென அழைச்சுப் பெண்ணுருமா னாகப்
போகவென்று சொல்ல, மாரீசனும் அப்போ,
என்னபுத்தி போடா, ராவணா உனக்கு?
யாகசாலை தன்னில் ஏமன்போல வந்து
அன்னையுமே கொன்றான்; சுவாகுவையும் கொன்றான்;
என்றுசொன்ன போது, நீ, போகாவிடில் உன்னை
வேல்அஸ்திரத்தி னாலே கொன்றுமே விடுவேன்,
என்றுராவணன் சொல்ல—அப்போ—மான்வடிவ மாக
மாரீசனும் அப்போ சீதைவிழி முன்னே
தானும்வந்து நிற்கச் சீதையம்மன் தானும்
ஸ்ரீராமரிடம் வந்து—இம்—மானெனக்கு வேணும்;
புடிச்சுமே தருவீர், [என்றுசொன்ன போது]
தம்பிலெட்சு மணரும், பொன்உரு மான்அல்ல;
என்றுசொன்ன போது, தம்பி, சீதையாளைக் காரும்,
என்றுசொல்ல ராமர் [உடனே எழுந்து]
மானின்பின் தொடர மாய்கையத னாலே
ஒருகாட்டில் இருக்கக் கோபமது கொண்டு
ஒருகணை தொடுத்து மாரீசனைக் கொன்றார்,
அவன், லெட்சுமணா என்று அபயமது கூற
அவ்விசேஷம் கேட்டுச் சீதையம்மன் தானும்,
(தம்பி) அண்ணன்ராம ருக்கு அபாயம்வந்த தாலே,
அறிக்கையிட்டார் தம்பி; துரிதமுடன் ஓடித்
தெரிந்துமே வருவாய் என்றுசொன்ன போது,
தம்பிலட்சு மணரும் அண்ணனைத் தேடிப்
பின்தொடர்ந்து போனார். ராவணனும் அப்போ
பாதாளத்தில் தேரைப் பதுக்கியே வச்சுச்
சந்நியாசி யாகப் பிட்சைஎன்று வந்தான்.
பத்தடி அளந்து பிட்சையும் எடுத்துத்
திருவோட்டில் அளிக்கத் தன்கையில் என்னஎன்று
ராவணனும் கேட்க, ஒருகையில் சங்கு
ஒருகையில் ஓடு, ஓடுமென்ற போது,
பாவிரா வணனும் பர்ண சாலையைப்