ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு
49
பேர்த்துத்தேரில் இட்டு ஓடினான் இலங்கை,
சடாயுராஜன் கண்டு கனத்தசண்டை செய்ய
அவன்இறகை வெட்டி அங்கேயே போட்டு
இலங்கைமூதூர் வந்து [எழில்மிகுந்த சோலை]
அசோகவனந் தன்னில் அருஞ்சிறையில் வச்சான்;
திரிசடையாள் தன்னைக் காவல்அங்கே வச்சான்.
ராமர்லட்சு மணரும் இருவரும் கலந்து
பத்தினி சீதையைப் பஞ்சவடி தன்னில்
காணாத யடியால் தேடிப்புறப் பட்டார்,
சீதையாளைப் பார்த்த சடாயுகிடக்கக் கண்டு
சீதை—சேதியும் தெரிஞ்சு அவரைத்தகனம் செய்து
கடனது கழிச்சுச் சபரியிடம் போயி
எச்சில்கனி தின்னு சங்கதி தெரிஞ்சு,
கிஷ்கிந்தையில் வந்து வாலியையும் கொன்று
சுக்ரீவனின் கஷ்டம் தம்பியால் அழித்துத்
துங்துபி எலும்பைத் தானுமே எறிந்து
மராமரங்கள் ஏழையும் ஒருகணை விடுத்துத்
தானும்விழச் செய்து, வாலியவன் தானும்
வருந்திய போதுதான் என்மேலே விட்டதோர்
பாணமது தன்னைத் தம்பிமேல் விடாதே;
ராகவா சரணம், பொற்பாதம் சரணம்,
என்று, வாலியும் துதிக்க மாலியவந்த மலையில்
மழைநாளது தங்கித் தம்பியை அழைச்சு,
இன்னம்வர வில்லை, சுக்ரீவன் தானும்,
தம்பிநீ அறிஞ்சுவராய்; சொன்னமொழி தன்னைச்
சுக்ரீவ னிடத்தில் தானுமே சொல்ல,
அவன், சேனைக ளுடனே தானும்புறப் பட்டுச்
சீதையைத் தேட அனுமாரை விடுத்து
நாலுபக்கம் தேடக் குரங்குச்சேனை விடுத்துத்
தென்திசைக்கு அனுமார்—ராமர்—மோதிரம்கைப் பற்றிச்
சம்பாதியைக் கண்டு சங்கதி தெரிஞ்சு
4