உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு

சுகசாரணாள் வந்து தளந்தனில் திரிய
அவர்களையும் கட்டி ராமர்முன்னே விட்டான்;
தூதனைஅறிந்து சொன்னார்ஸ்ரீ ராமர்;
சுகசாரணரே நீர்போய்ச் சொல்லுங்கள் போகி;
மூத்தமகனும் பின்பு வாய்த்த மகனும் மடுக்கச்
சுரேந்திரனும் படையும் அண்டையில் இருக்கவும்
மண்டுகளத் திருக்கச் சண்டையிலே கொடிய
கூற்றுவன்கைக் கொள்ளத் தூற்றிவிடுவேன் என்று,
சொன்னசொல்லைக் கேட்டுச் சுகசாரணர் ஓடி
ராவண னுடனே தாம்எடுத் துரைக்க
உத்தர கோபுர உச்சியிலே ஏறிச்
சாரணரும் காட்ட ராவணனும் பார்க்க
விபீஷணனும் அப்போ பாரும்சுவாமி என்று
ராவணனைக் காட்ட அதுவழிய தாகச்
சுக்ரீவன் எழுந்து ராவணன்மேல் பாய்ந்து
மருடம்பத்தும்தூக்கி ராமர்பாதம் தன்னில்
சுக்ரீவனும் வச்சுப் பாதமே பணிந்தான்;
இலங்கைநகர் தன்னை நாலுபக்கம் சூழ்ந்து
வளைத்துக் கொண்டு ராமர் சங்கதி அறிந்து
அங்கதன் தனையும் தூதாக விடுத்துச்
சங்கதி தெரிந்து உன்னைப்பிள்ளை யாகத்
தெய்வம்எனக் கென்று பட்டமும் தரித்து
உன்–தகப்பன்பழி தீர்ப்பேன்; அங்கதனே வாநீ;
என்றசொல்லக் கேட்டு-அட-ராவணனேநீ நாளை
ராமருட பாணம் உன்றனையும் கொல்லும்.
அங்கதனும் சொல்ல, ராவணன்கோ பிச்சுத்
தூதர்களை விட்டுக் கட்டுமென்று சொல்லத்
தூதரை அடிச்சு ராமரண்டை வந்து
சண்டையே அல்லாது-சுவாமி-குணப்க்ஷம்ஏ தையா?
என்றுசொன்ன போது இலங்கையில் புகுந்து
சண்டையது செய்தார். அறிபதியால் ஒண்ணு;
வானராள் இலங்கையை வளைச்சுச்சண்டை செய்ய