ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு
53
ராவணனும் வந்து அனுமாரை அடிக்கக்
களைத்துமே இருக்க லக்ஷ்மணரும் வந்து
ராவண னுடனே சண்டையது செய்து
மூர்ச்சையது வானார்; களைதெளிந் தனுமார்
திசைமுகனைக் குத்த அவன்கலங்கித் தேறி;
அறுபதியால் எட்டு; அனுமாருடை தோளில்
ராமரவர் ஏறி ராவண னுடனே
வேணசண்டை செய்து ஒண்டியாகச் செய்து,
ஏதடா, ராவணா, என்னடா சம்மதமா?
ஒண்டியாய் நின்றாய்; சீதைதனை விட்டால்
பிழைப்பாயேடா நீயும்; இல்லாவிட்டால் போய்நீ,
நாளைவாடா துரோகி, என்றுசொன்ன போது
வெறுங்கையுடன் ஓடி இலங்கைநகர் சேர்ந்து
மாலியவா னோடே தானுமே அழுகச்
சீதைதனை விட்டு நீபிழைப்பாய் என்றான்;
இதைமகோ தரனும் கும்பகர்ணன் தன்னை;
எழுப்புமென்று சொல்ல, நித்திரை பங்கமாய்
அவனுமே எழுந்து வானர சேனையைக்
கும்பகர்ணன் கேட்டுப் புலஸ்தியன் குலமும்
போய்மடிய லாச்சு; சுவாமிபதம் சேர்வேன்.
தம்பிகும்ப கர்ணன் சண்டைசெய்ய வந்தான்;
ஸ்ரீராமரு மப்போ விபீஷணன்தன் னாலே
கும்பகர்ணன் தன்னை அறிந்துவாரும் என்றார்;
தக்ஷணமே போகக் கும்பகர்ணன் தானும்
விபீஷணன் தனக்குப் புத்திகள் உரைத்து
சண்டையது செய்யச் சுவாமியுடன் செல்லும்;
தம்பியென்று சொல்லிச் சண்டையது செய்தான்;
சுக்கிரீவன் சேனையைக் கசக்கிப் பிழியக்
கும்பகர்ணன் சூலம் தம்பிமேலே விட்டான்;
தடுத்துமேசுக் ரீவன் காதுமூக்கு ரெண்டும்
தறித்துப்பின்னம் செய்யப் பங்கம் வராமலே
தன் தலையை மறைக்க ஸ்ரீராமரைத் துதிச்சு