ஸ்ரீ ராமர் ஏற்றப் பாட்டு
57
பரிகலத்தில் அன்னம் பாதி பகுந்தே
அந்தஅமுது தன்னை அனுமருந்தான் அப்போ
சகலசேனை யர்க்கும் விநியோகந்தான் செய்தார்;
அவ்விடமே விட்டுக் குகன்றனை அழைத்துப்
பரதனையும் கண்டு ஆதரவு செய்து
எல்லாரு மாக அயோத்திநகர் வந்து
பட்டமுந்தான் கட்டிப் பாரமுடி சூடிப்
பாரெல்லாமே ஆண்டார்; அயோத்திநகர் தன்னை
ஆண்டார்ஸ்ரீ ராமர், சீதையம்ம னுடனே;
சீராய்முடி பூண்டார்; தம்பிய ருடனே
ஆண்டுவந்தார் ராமர் மங்கள கரமாய்;
அரசுமுடி தாங்கி மன்னுமர சாண்டார்;
சென்றுதையா நூறு. வல்லபிள்ளை யார்க்கு;
காரும்ரகு ராமா, கடைக்கண்ணாலே பாரும்;
ஏழைகளைக் காரும்; எங்கள்குல ராமா.
ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றி மூதண்டமாய் வாழ்வீர்;
இன்னம்ரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழிரகு ராமா, மங்களமாய் வாழ்வீர்;
வாழிரகு ராமா, தீர்க்கதெண்டம் ஐயா,
ஏழைகளைக் காரும்; ஸ்ரீரகு பதியே,
தெரிந்தும்தெரி யாமல் ஏதேதுசொன் னாலும்
தப்புபிழை தன்னைத் தானுமே பொறுத்துப்
பொறுத்தருள் தருவாய்; ஆல்போலவே வாழி!
வாழி, வாழி, ராமா! வணங்கித்தெண்டம் ஐயா,
தெண்ட மையா, தெண்டம்; தேவர்க்கெல்லாம்
தெண்டம்;
ஸ்ரீராமர் பாதம் தெண்டம்; ஸ்ரீராமர்கதை பாட
நல்லருளும் தாரும், நன்மையுடன்மங் களமாய்
வாழ்ந்தார் இராமர், வாழி வாழி வாழி!