உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்றப் பாட்டு

(வேறு)

மாமரத்தின் கீழே ஒரு—மங்கைஉரை சொன்னாள்;
மாமரங்கள் எல்லாம் மாமாறிப் போச்சு;
பூமரத்தின்கீழே ஒரு பொண்ணுஉரை சொன்னாள்;
பூமரங்கள் எல்லாம் பூமாறிப் போச்சு;
காமரத்தின் கீழே ஒரு கன்னிஉரை சொன்னாள்;
காமரங்க ளெல்லாம் காய்மாறிப் போச்சு;
(சுவாமி) அன்பழகன் தம்பி, – உன் — அம்பும் வில்லும்
         எங்கே?
அம்பாளுடன் கூடி அம்பும்வில்லும் தோத்தேன்;
காரழகன் தம்பி, உன் கரும்புவில்லும் எங்கே?
(அந்தக்) கன்னியிடம் கூடிக் கரும்புவில்லும்
         தோத்தேன்.
சிண்டழகன் தம்பி, உன் சிண்டும்வில்லும் எங்கே?
(என்) சிண்டும்வில்லும் அண்ணா, சீதையுடன் கூடி
சீதைமடி மேலே நான்—கூடிவிளை யாடிக்
கூடிவிளை யாடி என் சிண்டும்வில்லும் தோத்தேன்.
ஆருதையா தோட்டம்? அழகான தோட்டம்; (இது)
தருமருடை தோட்டம்,தங்கக்குலை வாழை ஐயா;
புண்யருடை தோட்டம், பூவங்குலை வாழை ஐயா;
ஏழைவச்ச வாழை ஏணிவைக்க வாச்சே;
பஞ்சைவச்ச வாழை (சுவாமி) பந்தலிட வாச்சே;
ஏழுவெள்ளம் சேனை எழுபதியால் ஒண்ணு,

(வேறு)



மாயவனை வேண்டி [மகதேவரை வேண்டி]
ஓடிவரும் புள்ளை ஒருகாலுத் தண்டை
கைக்காப்பு வெள்ளி—அதைக் – கழற்றினவன் யாரோ?
பிள்ளையில்லாப் பாவி பிடுங்கிவச்சுக் கொண்டான்;