உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்றப் பாட்டு

59

மக்களில்லாப் பாவி மறிச்சவிழ்த்துக் கொண்டான்;
இருடிபொண்ணே போவோம், ஒரு சரவணம் பார்க்க;
காட்டானை மேயும், அந்தக் காட்டானைச் சத்தம்,
கோட்டைக்குத்தான் கேட்கும், ஆனை அலற;
முத்தான பொன்னே, அத்தைமகன் வாறான்;
கொட்டாத மோளம், கோவில்மோளம் கொஞ்சம்;
அவன், கட்டாத தாலி, அவன், கழட்டினாண்டி மாலை;
மாலைஎன்றால் மாலை, மல்லிகைப்பூச் செண்டு;
இது, யாருடைய மாலை வருவதையா மேலே,
அது, மாமனுடை மாலை, அங்கே;
தாலிஎன்றால் தாலி, அது, தங்கச்சரம் தாலி,
ஒருகாலுத் தண்டை உலகவிலை பொறுமா?
இவன், இடதுகாலுத் தண்டை ரெண்டாயிரம்
        பொறுமா?
அம்பாய பட்டு ஆம்பிளையைப் பெத்தா;
ஆம்பிள்ளைக்குப் பேரு—சிறு—வேம்புதனை வச்சாள்;
எண்ணெயைக் குறைச்சான், எண்ணெய்க்செக்கான் வீடு;
அது, கல்லுக்கட்டி தேசம், கடலைப் பட்டான் ஊரு;
எண்ணெய்வாங்கப் போனேன், இளமயிலைக் காணோம்;
பாவைகொள்ளப் போன சிறு பசுங்கிளியைக்
       காணோம்.
துலுக்கருட தேசம் துடியவரக் காணோம்;
ஆரடியே பொண்ணே, இது, ஆருடைய தேசம்?
இது, கள்ளருட தேசம்...
போகுதடி கொள்ளை, அந்தப், பொத்தவண்ணான் வீட்டில்,
இது, கள்ளருட சீமை, கடலைக்காரன் ஊராம்;
எம்பதடிக் கம்பம், இதை எடுத்துநட்ட டொம்பே
அங்கே, டொம்பன்குழல் ஊதத் தும்பிகுழல் ஊத,
வந்தசனம் பார்க்க, எங்கள், தாரையங் கூத,
சில, கூர்ந்தசனம் பார்க்கக் குதுகலித்து நோக்க
நாலுலட்சம் பொண்கள் வெண்சாமரை வீச,
வேதியர் குலமாம், இக்காலத்துப் பொண்கள்;
ரெண்டுபொண்கள் கொண்டு போறாளாம் வாடி.