உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்கள்

[உழவு முதலிய பல வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பாடும் பாடல்கள்.]

மா இடித்தாள்

டிங்கு டிங்காளே, மாஇடிச் சாளே,
வண்டிக் கார மாமனுக்கு ரெண்டு போட்டாளே;
எனக்கு, ஒண்ணு போட்டாளே;
அந்தாள் போனானே; நான் காணப் போறேனோ?

உழவுப் பாட்டு

1. பத்தேரு கட்டியல்லோ ஏலேலோ
பத்தேரு பத்தாதுன்னு பக்கத்திலே ஆனைகட்டி
ஆனைகட்டிச் சேறடிக்கும் அதிகாரி பண்ணைஇது.

2. எட்டேரு கட்டியல்லோ இடதுபுறம் ஆனைகட்டி
ஆனைகட்டிப் போரடிக்கும் அதிகாரி பண்ணைஇது.

3. குடத்திலே பாலுகொண்டு கூடையிலே சோறு
கொண்டு, பசியாத்தி வேலைகொள்ளும் பாக்கியவான்
பண்ணைஇது

4. காணிக் கரையோரம் காத்திருக்கும் பிள்ளையாரே,
காணிநட்டு நான்போறேன்; கரையேறும் பிள்ளையாரே.

5. எல்லைக் கரையோரம் இருப்பிருக்கும் பிள்ளையாரே,
எல்லைநட்டு நான்போறேன்; எழுந்துவாரும் பிள்ளையாரே!


ஏலேலோ ஐலசா


மரத்தை நம்பி ஏலேலோ ஐலசா
பூவை நம்பி எலேலோ ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ ஐலசா
காயை நம்பி ஏலேலோ ஐலசா