உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்கள்

63

உன்னை நம்பி ஏலேலோ ஐலசா
வரப்பை நம்பி ஏலேலோ ஐலசா
வயலை நம்பி ஏலேலோ ஐலசா
கதிரை நம்பி ஏலேலோ ஐலசா
நெல்லை நம்பி ஏலேலோ ஐலசா
நாத்தை நம்பி ஏலேலோ ஐலசா
நடவு நட்டு ஏலேலோ ஐலசா
களம டிச்சு ஏலேலோ ஐலசா
நாத்தைக் கட்டி ஏலேலோ ஐலசா
தூக்கிக் கொண்டு ஏலேலோ ஐலசா
எஜமானன் வீடுபோகணும் ஏலேலோ ஐலசா.


நடவுப் பாட்டு

எதிரான வீட்டிலே இலஞ்சியம்போல் பொண்இருக்காள்; கழுதை உதடிமேலே கண்டாசைப் பட்டாரு; நூலாலே தேராம்; நொடிமுத்தாம்; சப்பரமாம்; சப்பரத்துக் குள்ளிருக்கும் சாதிக்காய்க் கேடயமாம்; கேடயத்து மேலே கிளிமூக்கு வாகனமாம்; வாகனத்தின் மேலேறி மகமாயி வாறாளாம்; அரைச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு; அம்மி கொண்ட பொன்னைப் பாரு; குளிச்ச மஞ்சள் நிறத்தைப் பாரு;—அம்பாளுக்குக் கொண்டை கொண்ட பொன்னைப் பாரு

ஏறாத தெத்தெருமைக் காரா, ஒன், பொண்டாட்டி செத்துப் போனா; வாடா; அவள், போனாலும் போயிப் போறா மயிலே; நான், வல்லையின்னு சொல்லப் போறேன் குயிலே!

பிள்ளையார் கல்லாலே, பிடாரியும் கல்லாலே; ஐயனார் ஏறிவரும் கிளிவாகனம் பொன்னாலே; இந்திரரை நான்நோக்கி எடுத்தேன் எலைமுடிய; சாச்சேன் சனிமூலை; உன்நாடு, உன்தேசம்; பொன்னா விளையவேணும்; [பொருளாச்சொரியவேணும்,] முக்கலம் பச்சரிசி, மூவாயிரம் செவ்விளநீர்,</poem>