தொழில்கள்
69
கோபுரத்தைக் கண்டவங்க கோடிதவம் செய்தவங்க;
சிதம்பரத்தைக் கண்டவங்க சேனதவம் செய்தவங்க;
சேனை பெருத்தவண்டா, சினம்பெருத்த ராவணங்க;
கும்பு பெருத்தவண்டா, குணம்கெட்ட ராவணங்க;
ராவணன் சேனைஎல்லாம் ராவாப் பயணமிடப்
பட்டாணி சேனைஎல்லாம் பகலாய்ப் பயணமிடப்
பயணம் பயணமடி; பத்தாவுந் தான்பயணம்;
சோங்குப் பயணமடி; சொன்னகப்பல் தான்பயணம்;
தானாடித் தள்ளாடித் தாயே, நடந்துவாடி;
நடந்தால் நடைதோணுமோ? நாணயமாய் ஊர் தோணுமோ?
மாண்புமடம் போனாலும் மதுரை வழிதோணுமோ?
மதுரைச்சொக்க நாதன்துணை; வள்ளிமண வாளன்துணை!
வள்ளிக்கெல்லாம் வலதுக்கெல்லாம் வலையில்படும் மீனுக்கெல்லாம்,
மீனா மிதந்தவலை, மீனாட்சி யம்மன்வலை,
கடலா மிதந்தவலை, காமாட்சி யம்மன்வலை;
அம்மணி என்தாயே, ஆதிபரா சக்தியே,
திக்கெல்லாம்கண்படைச்ச தேவிபரஞ் சோதியே,
தேவி கடலோடத் தேசமெல்லாம் கொண்டோட
மாரி கடலோட மாமாங்கம் கொண்டோடக்
கொண்டவனைக் கண்டாலும் குலையை நடுக்குதே!
வளர்த்தவனைக் கண்டாலும் அடிவயிறு நோவுதே!
நோவஉரை யாமலே நொந்தகண்ணால் பாராமலே
சாய உரையாமலே சாயந்தகண்ணால் பாராமலே
பாருக்கு ஓடித்தானா பருந்துலப்பை பேத்தெறக்கி
ஏழைஎன்று பாராமலே எடுத்துதே வாலிபங்க;
வாயிருந்தால் தேடலாமா? வாதுசொன்னால் அழிக்கலாமா?
அழுதகண்ணு சிந்தனையா அவள் போனாளாம் மூலையிலே;
மூலையிலே கள்ளைவச்சு மொந்தைக்கள்ளை வார்ப்பாளோ?
சாலையிலே கள்ளைவச்சுச் சாத்தமுதை வார்ப்பாளோ?
சாத்தங் கர்டாம் சடையன் குப்பம்,
தயவுண் டானால் வரச்சொல் லுங்க,