சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு
77
கூண்டுக்குள்ளே போற போண்ணே,- ஏலேலமடி ஏலம்
கூப்பிட் டாலும் கேட்கலையே!- ஏலேலமடி ஏலம்
✽✽✽
சாலையிலே ரெண்டுமரம்- ஏலேலமடி ஏலம்
சாமி துரை வச்சமரம்- ஏலேலமடி ஏலம்
எல்லோருக்கும் ஏத்தமரம்- ஏலேலமடி ஏலம்
உனக்குத்தாண்டா தூக்குமரம்- ஏலேலமடி ஏலம்
தூக்கு மரத்தண்டை- ஏலேலமடி ஏலம்
வாக்குமூலம் கேட்கறாங்க- ஏலேலமடி ஏலம்
✽✽✽
ஒருமரத்தை வெட்டி- ஏலேலமடி ஏலம்
ஒருமரத்தில் ஊஞ்சல்கட்டி- ஏலேலமடி ஏலம்
ஊஞ்சல்மேலே போகும்கிளி- ஏலேலமடி ஏலம்
அது, ஆண்கிளியோ பொண்கிளியோ- ஏலேலமடி ஏலம்
அது, ஆண் கிளியும் அல்லமச்சான்,
பொண்கிளியும் அஎலமச்சான்; ஏலேலமடி ஏலம்
தாயை மறந்தகிளி, தாய்வீட்டுக்குப் போகுங்கிளி,
ஏலேலமடி ஏலம்
காட்டாமணிக் கட்டைவெட்டி கறுப்புக்காளை ரெண்டும்
பூட்டி, ஏலேலமடி ஏலம்
சோடுபோடும் வெள்ளைக்காளை சுத்துதடி மத்தியானம்,
ஏலேலமடி ஏலம்
அறுத்துவிட்ட கம்மனாட்டி, ஆறுமாசம் புள்ளைத்தாயச்சி,
ஏலேலமடி ஏலம்
மானபங்கம் ஆகுதுன்னு மருந்துவகை தேடுறாளே,
ஏலேலமடி ஏலம்
அஞ்சு பிராயத்திலே அறியாத நாளையிலே, ஏலேலமடிஏலம்
கொஞ்சம் பிராயத்திலே கூடினோமே ரெண்டுபேரும்,
ஏலேலமடி ஏலம்
ஆகாத காலம்வந்து ஆளுக்கொரு தேசம்போனோம்,
ஏலேலமடி ஏலம்