உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு

காலையிலே- என்சாமி- வந்தவங்க
காலெலும்பு நோவுதையா;- ஐலசா
விடியக்காலம்- என்சாமி- வந்தவங்க
விரல்எலும்பு- என்சாமி- நோவுதையா;- ஐலசா
தொட்டிலிலே- என்சாமி- போட்டபுள்ளை
தூக்கிப்பார்க்க- என்சாமி- நேரம்இல்லை;- ஐலசா
ஏணையிலே- என்சாமி- போட்டபுள்ளை
எடுத்துப்பார்க்க என்சாமி- நேரம்இல்லை;- ஐலசா
ஆணோடே- என்சாமி- பொறக்கலையோ?
ஆலமரம்- என்சாமி- வைக்கலையோ?- ஐலசா
பொண்ணாடே- என்சாமி- பொறக்கலையோ?- ஒரு
புளியமரம்- என்சாமி- வைக்கலையோ?- ஐலசா
வீதியிலே- ஏலேலோ- பொன்னம்மா- கல்லுரலு,
வீசிவீசி- ஏலேலோ- பொன்னம்மா- குழந்தையிலே,
காலுவெள்ளி மோதிரமாம், ஏலேலோ– பொன்னம்மா,
கண்ணைச் சுழற்றுதடி; ஏலேலோ பொன்னம்மா,
பாதையிலே- ஏலேலோ- பொன்னம்மா- பாலைமரம்
பளபளன்னு- ஏலேலோ- பொன்னம்மா- பாலைமரம்
பூத்திருக்கும்- ஏலேலோ- பொன்னம்மா,
மாமன்மகன்- ஏலேலோ– பொன்னம்மா,
இறைக்கும் தண்ணி- ஏலேலோ- பொன்னம்மா,
அத்தனையும்; ஏலேலோ- பொன்னம்மா, சக்கரையாம்;
கள்ளேரி- ஏலேலோ- பொன்னம்மா, மண்எடுத்து
கச்சிதமாய்- ஏலேலோ- பொன்னம்மா, மச்சுக்கட்டி
மச்சுக்குள்ளே- ஏலேலோ- பொன்னம்மா, ரெண்டுகிளி
மாறாட்டம்- ஏலேலோ- பொன்னம்மா, செய்யுதடி.

(வேறு)



ண்டிகட்டி மாடுகட்டி- ஏலேலமடி ஏலம்
மீனாட்சியம்மன் கூண்டுகட்டி- ஏலேலமடி ஏலம்