துாரிப் பாட்டு
75
பொன்னை அளந்தவரே, பூலோகம் ஆண்டவரே,
அரஹரா முருகையா
ஆண்டவனார் ஏறிவர ஆனைரதம் பொன்னாலே,
அரஹரா முருகையா,
குட்டியாண்டி ஏறிவரக் குதிரையும் பொன்னாலே;
அரஹார முருகையா,
குதிரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே?
ஆனை குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே?
வையைவள நாடாமே; நான்பொறந்த சோணாடாமே?
ஊசி வளநாடு, உந்துராஜன் சோணாடு!
உத்தரவு இல்லாமலே, சித்தெறும்பு நடையிலே
நாடுதங்கிப் போகுதையா; நல்லசேதி சொல்லவேணும்;
ஊருதங்கிப் போகுதையா, உற்றசேதி சொல்லவேணும்;
சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியாள வாய்திறந்து;
அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய்திறந்து;
வாயில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால் தண்ணிவர,
கண்ணில்நல்ல புகைஎழும்பக் கடைக்கண்ணால்
தண்ணிவர,
தண்ணியில்லாச் சாதமையா, தளும்புதையா தயிர்சாதம்;
எண்ணெயில்லாப் பந்தமது எரியுதே தீபமது
பொன்னான வாக்கு, போட்டாரே வாக்கு;
இதுவல்ல வாக்கு இன்னமொரு வாக்கு;
வாக்கிலே தணிஞ்சு வாங்கடா பெரியாளு;
தோலில் தணிஞ்சு தோவும் பெரியாளு;
தோவி எடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.