உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தூரிப்பாட்டு

பயறு கலந்திருக்கும்; பல்கலமும் பச்சரிசி;
        அரஹரா முருகையா,
பச்சைமுத்து வாசலிலே பாக்குமரம் காவல்தானோ?
        அரஹரா முருகையா,
சின்னமுத்து வாசலிலே சிலுவைமரம் காவல்தானோ?
        அரஹரா முருகையா,
காவலுக்கு உள்ளேயோ களவுவரப் போகுது?
        அரஹரா முருகையா,
எல்லைக்கு உள்ளேயோ இடருவரப் போகுது?
        அரஹரா முருகையா,
போகட்டா என்தாயே? போய்வரட்டா மாரிக்கண்ணு?
        அரஹரா முருகையா,
மாரி மகமாயி மகுடசொம்பு ராஜாத்தி
        அரஹரா முருகையா
குப்பத்து மாரிக்கண்ணு, கொலுவில் அலங்காரி,
        அரஹரா முருகையா,
அலங்காரம் படைச்சவளே, ஆணடிமை செய்தவளே,
        அரஹரா முருகையா,
உன்னைவிட ஒருவரில்லை; உதவி துணை ஆருமில்லை;
        அரஹரா முருகையர்,
ஆரையோ நான்நினைப்பேன் அளவற்ற சிந்தையிலே?
        அரஹரா முருகையா,
எவரை நான்நினைப்பேன், எண்ணமத்த சிந்தையிலே?
        அரஹரா முருகையா,
எண்ணமெல்லாம் ஒண்ணாச்சுதே! ஏழைமனம், குன்னவாச்சே,
        அரஹரா முருகையா,
குன்னம்போல் கட்டைவெட்டிக் கோபுரம்போல்தீவார்த்து,
        அரஹரா முருகையா,
கோபுரமும் பொன்னாலேயாம்; குடவிளக்கோ முத்தாலே;
        அரஹரா முருகையா,
மாமனார் பூசைபண்ணும் மணிவிளக்குப் பொன்னாலே;
        அரஹரா முருகையா,