உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூரிப் பாட்டு

73

மண்மீது பாணமது மாரைப் பிளக்குதங்கே;
         அரஹரா முருகையா,
தம்பியுட கைப்பாணங்கள் தலையை அறுக்குதங்கே,
         அரஹரா முருகையா,
தலையில் எழுதினவன் தப்பாமே எழுதுவானோ?
         அரஹரா முருகையா,
மண்டையிலே எழுதினவன் மறைச்சு எழுதுவானோ!
         அரஹரா முருகையா,
எழுதினவர் கண்களிலே எழுத்தாணிக் கூருமின்னால்;
         அரஹரா முருகையா,
பண்ணினவன் பாவமெல்லாம் பாம்பாப் புரளுறனோ;
         அரஹரா முருகையா,
பாம்படிச்சு மேல்போட்டாரே, பழிகாரப் பட்டணத்தில்;
         அரஹரா முருகையா,
கொடி புடுங்கி மேல்போட்டாரோ, கொலைகாரப் பட்டணத்தில்
         அரஹரா முருகையா,
அல்லிக் கொடி புடுங்கி அண்ணாக் கயிறுதிரிச்சார்;
         அரஹரா முருகையா,
வர்ணவர்ணக் காடுகளாம், வழிவழியாம் சாலைகளாம்;
         அரஹரா முருகையா,
பின்னமரத் தோப்புகளாம், இளந்தோப்பாம், சாலைகளாம்;
         அரஹரா முருகையா,
சாலடா உன்வயிறு, சாதிகெட்ட பண்டாரமே,
         அரிஹரா முருகையா,
ஏரியடா உன்வயிறு, ஏதும்கெட்ட பண்டாரமே,
         அரஹரா முருகையா,
கல்லையா உன்மனசு கரையலையா எள்ளளவும்?
         அரஹரா முருகையா,
இரும்பையா உன்மனசு; இரங்கலையா எள்ளளவும்?
         அரஹரா முருகையா,
எள்ளுக் கலந்திருக்கும்; இருகலமும் பச்சரிசி,
         அரஹரா முருகையா,