பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரிப் பாட்டு

குதிரை குளிப்பாட்டக் குளமுண்டோ வையகத்தே ஆனே குளிப்பாட்ட ஆறுமுண்டோ வையகத்தே? வையைவள நாடாமே, கான்பொறந்த சோளுடாமே, ஊசி வளநாடு, உத்துராஜன் சோனடு; உத்தரவு இல்லாமலே சித்தெறும்பு நாடாமலே காடுதங்கிப் போகுதே நல்லசேதி சொல்லவேனும்; ஊருறங்கிப் போகுதையா உற்றசேதி சொல்லவேனும்; சொல்கிறேன்காண் மெல்லியரே, சோதியான வாய் திறந்து, அல்லாங்காண் மெல்லியரே, அன்னக்கிளி வாய் திறந்து; வாயில்ால்ல புகைஎழும்ப வலதுகண்ணில் தண்ணிவரத் தண்ணியில்லாச் சாதமையா, தளும் புதையர் தயிர்சாதம். எண்ணெய்இல்லாப்பந்தமது எரியுதே தீபமது. ‘. .

(காற்றுப் பலமாக அடிக்கும்போது வலயர் பாடும் பாட்டு.) - : -

வேல்எடுத்து. முருகரே ஒருபுறம். அரஹரா முருகையா, விதவிதமாய் மயிலேறியே. அரஹரா முருகையா, இடும்பன் (கல்லா) ஒருபுறம்- இருபுறமும் காவடியாம்: வள்ளி (கல்லா) வலதுபுறம். தேவானே இடதுபுறம்,

அரஹரா முருகையா, ஈயு (கல்லா) நுழையாக் காடு- இருவேலங் காடானது,

அரஹரா முருகையா, இல்லாண்ணே காட்டிலேயோ இருப்பாயோ

பூமியிலேயோ? பூமியிலே அவதரிச்சுப் புண்ணியரே வந்தமர்ந்தார்;

அரஹரா முருகையா, வந்து (நல்லா) எடுத்தார்களோ, வாடையிட்டுச் சூழ்ந்தார்களோ? அரஹரா முருகையா, சுத்தி கல்லா வளைச்கார்களோ? சூழ்ந்தார்கள்

வானமெல்லாம்; அரஹரா முருகையா,