தறிப் பாட்டு
[செங்குந்த முதலியார் வகுப்பினர் தறி நெசவு செய்யும்போது பாடும் பாட்டு இது. உற்சாக மிகுதியால் அவர்கள் பாடும் பல்வேறு பாட்டுக்களில் இங்கே உள்ளது, தறிகோலப் பள்ளம் தோண்டுவது முதல் தறி பூட்டி, பாவு ஓட்டி, இணைத்து, நெசவு செய்து முடிக்கும் வரையுள்ள பல்வேறு பகுதிகளைக் குறித்துக் கூறுவது.]
(ஓடப்பாட்டு மெட்டு)
(1)
கொட்டிக்கோ வடக்குமுக மாகவே நின்று;
குனிந்துமண் மீதிலே மனமும்ஒன் றாக.
வெட்டியா னைப்பிடித்து மேல்சேரத் தூக்கி
மேலுக் கெதிராகத் தாழவே போடு;
கட்டியாகப் போகுது; வெட்டியும் பாரு;
காலரம் பானவன் மேல்விழப் போறான்;
முட்டுக் குடுத்து முழங்காலும் தூக்கி
மூச்சைப் புடிச்சொரு பாச்சலாத் தூக்கு;
கொட்டாரம் பண்ணாதே, கெட்டியாத் தூக்கு;
ஒசந்தா அரைமட்டம் நெறைஞ்சதா பாரு;
சட்டமா நீர்சொன்ன படியுமே ஆச்சு;
தண்ணீர் மொண்டுவரச் சென்றதே கப்பல்,
ஏலேலோ!
(2)
தண்ணிசுனை தனிலேகிக் குடங்கள்
தான்நெறையக் கொண்டு வந்து
மணைப்பலகையாற் செய்த கப்பல்
மடிபுடைவைதனைக் கேளாய்.
வெள்ளத்தை வாங்கிநீ பள்ளத்தில் வாரு;
வெட்டியா னைப்புடிச்சுக் கட்டியும் தள்ளு;
6