82
தறிப் பாட்டு
பள்ளத்தில் வெள்ளமது துள்ளியே போகுது;
பறியடா, தறியடா, மிறியடா, வெறியா!
பிள்ளைவெள் ளாடதே பிசினிபோல் ஆக்கு;
பெருச்சாளி சண்டைக்கு நெரிச்சுக்கொண்டு வருவான்;
கள்ளைக் குடிச்சுநீ துள்ளிவீ ழாதே;
கஞ்சிமிஞ் சித்தென்று துள்ளாதே படுவா;
தெள்ளிப்போட உள்வாயில் திருப்படா மண்ணை;
சேறுபோ லாக்காதே; பாலுபோ லாக்கு;
வள்ளலை நெனச்சுக்கொள், உள்ளபடி யாக;
மணியாச மாச்சு. ஏலேலோ ஐலலோ (வேலனே)
(3)
மணியாசம் ஆனபின்பு
கால்நான்கு மாநாக்குச் செப்ப னிட்டுத்
தணிகைமலை முருகன் தாளைத் துதித்துத்
தெய்வானை வள்ளியின் பாதங்கள் போற்றித்
தறிநாக்கு நட்டதில் படைமரம் போட்டு...
✽✽✽
திரியான படைச்சாய்ப்பில் சுண்டுவிரல் வச்சுச்
செங்கல் நாக்குக்கு நங்கூரம் பாய்ச்சு;
மரமாக இருக்குமுன்னு எதிராக நட்டு
வழுகாமல் விட்டம் சரியாகக் கட்டு.
[1] குறுக்கோலை கொண்டு ஒசத்தியே பாரு;
சிறுசாக விழுதுகொண்டு நடுமையம் கட்டு;
திட்டுமட்டு மாகக் கெட்டியாக் கட்டு;
இறுக்கிமணல் சலம்வார்த்துக் கத்திரிப்புணி பாரு
எங்குமே செவ்வனாக் கண்டுநீ பாரு;
ஏலேலோ மயில் வேலோனே!
- ↑ (பி.ம்.) *குருத்தோலை