தறிப் பாட்டு
83
(4)
பார்த்தபின்பு கொஞ்சம் மண்ணை எடுத்துப்
பாவைக் கொடுத்து நூலைச் சுருட்டி
நேர்த்திய தாக முருகன்திரு வடியை
நினைவினி லன்பாய்த் தொழுதே இறைஞ்சிச்
சொந்தக்கப்பல் ஓட்டும்வகை— கப்பல்
துறையறிந்து தமிழ்பாட
✽✽✽
வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு;
வரும்அலா ரெல்லாம் வாரியே போடு;
நனையடா பொய்ந்நூல் இல்லாத படிக்கு;
நல்லபா னையிலிட்டுக் கல்லின்மேல் கவிரு;
நனையடா மூணுநாள் ஆனபிற்பாடு
நேராகக் காஞ்சபின் சீராக இழைச்சுப்
புணையல் பதினெட்டுக் கொண்டோடிவாடா;
போய்ப்பாவு தட்டுநீ ஆவலாய் ஓடு;
மணையடா சாம்பல் எடுத்துக்கொண்டு வாடா;
வரிசுருள் பெரிசுருள் வரிசையாய்ப் பாரு;
எணையலும் சருகளை இப்பால்வரும் பாரு;
எமனிட்டு ஒருகையும் நமனையும் பாரு;
திரியான கருதலையும் ஒட்டுக்கும் தட்டு;
உறுத்தடா முளைபுடுங்கித் தெரியவே வையடா;
உருட்டடா, பாவுதனைச் சுருட்டிநனைத் தாடா;
ஏலேலோ—மயில்—வேலோனே!
(5)
நனைச்சுவந்த பாவு தன்னை மைக்கா
நாள்தன்னி லேநீ கொண்டு வந்து
கனைக்காத குதிரை தன்னைப் புடிச்சுக்
கால்ப ரப்பியே மேல்ஆள் பூட்டி,