தறிப் பாட்டு
35
(7)
வந்தபின்பு முருகேசன் திருவடியை
நினைவில் வச்சு அன்பாய்த் தொழுதி றைஞ்சிச்
சொந்தக் கப்பல் ஓட்டும்வகை— கப்பல்
துறையறிந்து தமிழ்பாட.....
வாரான கோல்கொண்டு நேராகப் பாய்ச்சு;
வரும்அலா ரெல்லாம் வாரியே போடு;
மண்டை கடையாணி கொண்டையும் கட்டி,
தார்தனைஎடுத்து நாடாவில் தாக்கித்
தலைதனைப் புடிச்சுத் துடைப்பத்தின் கீழ்வாங்கி
ஏறடா பூட்டை, இறுத்தடா மிதியை,
இந்தண்டை அந்தண்டை வந்ததா பாரு;
சிரசிலே சீரளந்து திட்டமாய்க் கட்டு.
[1] திட்டுமட்டுமாகக் கெட்டியாக் கட்டு
பிடியடா விசைகுத்திச் சதமுதல் குறியை
ஏலேலோ — மயில் வேலோனே!
(8)
முதலாம் குறிக்குப் பத்துவெடி போட்டு
முடுக்கிவந்து அச்சில் முகர வந்து
சதமான ரெண்டாம் குறிக்குக் கப்பல்
தானடையும் வகைதனைச் (சொல்லுவேன்)
கேளாய்,
✽✽✽
வரிக்கயிறு விட்டொரு பீரங்கி போடு;
பத்துப்பீ ரங்கிஒரு டபீரென்று போடு;
பார்த்துப்பிடு அப்பாலே பத்தாம் குறிக்கு;
எழுபது வெடிபோட்டு ஏகமாய்ச் சுருட்டு;
குருபாதம் நம்பிநீ தறிவிட்டு இறங்கு;
ஏலேலோ — மயில் வேலோனே!
(9)
குருபாதமாக வேணுமுன்னு பின்னும்
குடிவாழ வேனுமுன்னு
- ↑ (பி.ம்.) திட்டுமட்டுமாக