உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தறிப் பாட்டு

மறுபாவை ஓடித் தோய்ந்து வந்து
        வரிசையுடன் அதுதனைப் பிணைத்து.


நெய்திடும் பட்டை எடுத்துமே கட்டி
        நெலையான வர்த்தகாள் துலையைப் புடிச்சுக்
கையினில் கொண்டுபொன் மாதிகளை வச்சுக்
        கனமான வெலைபேசிப் பணமதை வாங்கிச்
செய்யும்வே லைக்காரர் கையில் குடுத்துத்
        திட்டமாய் நெய்யவே உண்மையைச் சொல்லித்
தையலாள் ராட்டினக் குடிகளுக் கெல்லாம்
        சட்டமாய் அடுக்குநூல் திட்டமாய்ப் பண்ணி
வெய்யவன் சந்திரன் உள்ள நாள் மட்டும்
        எந்நாளும் வர்த்தகாள் நன்றாக வாழ்க!
பயிரிடும் குடிகளும் தழைத்தோங்கி வாழ்க!
        பாரில்மன் னர்களும் செழித்தோங்கி வாழ்க!
வையகத் துய்யர்களாம் செங்குந்தர் வாழ்க!
        வாழ்கசிம் மாசனக் கப்பலும் வாழ்க!
                 ஏலேலோ— மயில்— வேலோனே!