உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

படையான கால அட்டவணையில், ஏலக்காயின் விதைப்பு நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் ஏலச் செடிகள் பலன் கொடுக்கத் தலைப்படும் என்பதும், ஏலச் செடிகளின் காய் எடுப்பு — அறுவடை பொதுவாகவே ஆகஸ்ட் – செப்டம்பர் காலக் கட்டத்திலேயே அமையும் என்பதும் தலைப்புச் செய்தாகிறது.

தென் இந்திய மாநிலங்களில், ஏலக்காய் விவசாயத்தில் அன்றும் சரி, இன்றும் சரி, கேரளம்தான் முன்னணியில் அமைந்து வருகிறது! — கி.பி. 1896 ஆம் ஆண்டு வரையிலும், ஏலப்பயிர் விளைச்சலில் கேரள மாநிலம்தான் ஏகபோகச் செல்வாக்குப் பெற்று விளங்கியது! - இந்திய நாட்டின் மொத்த விவசாயப் பரப்பிலே, 60 சதவீத அளவிலும், இந்தியத் தேசத்தின் மொத்த ஏலச் சாகுபடியில் 74 சதவீத அளவிலும், கேரளத்தின் பங்கு — பணி அமைந்திருப்பதாகவும் நடப்புப் புள்ளிக்கணக்கு சொல்லும்!

தென் இந்தியாவிலே, சிறிய ரக ஏலக்காயின் சாகுபடி தான் பொதுவாகவும் பரவலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழியில், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் குன்று சார்ந்த பசுமை மிகுந்த வனப்புறங்களில் ஏலக்காய் வேளாண்மை முதன்மை பெற்று விளங்கும்.

மாவீரனை மயங்கச் செய்த அதிசயம்!

பாருக்குள்ளே நல்ல நாடாகத் திகழும் பாரதத் திருநாட்டில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான மரபு வழிப்பட்ட வரலாற்றுச் சீரோடும் சிறப்போடும் உயிர் வாழும் ஏலக்காய், நறுமணப் பொருட்களான கிராம்பு, மிளகு, மஞ்சள் போன்றவற்றின் ராணியாகவும் திகழ்வது பொருத்தம் உடையதுதானே?

சரித்திர மாவீரன் அலெக்சாந்தரை அன்றைக்கு இந்திய நாட்டின்மீது படையெடுக்கத் தூண்டிய ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/15&oldid=505912" இலிருந்து மீள்விக்கப்பட்டது