உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

அடிப்படை ஆராய்ச்சி முடிவுகளை ஏலக்காய். வேளாண்மையில் பொருத்திச் சோதித்துப் பார்க்கும் களப் பரிசோதனை முயற்சிகளை விரிவாக்குவது;

ஏலச் சாகுபடியில் விஞ்ஞான வழியிலும் தொழில் நுணுக்கச் சார்பிலும் பொருளாதார ரீதியிலும் ஆய்வு ஆராய்ச்சிகளை - நடத்துவது;

மற்றும்—

ஏல விவசாயத் தோட்டப் பண்ணைத் தொழில் துறைகளின் சகலவிதமான வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தேவைப்படக்கூடிய பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

ஏலக்காய் வாரியத்தின் பயனுள்ள செயற்பணி நடை. முறைகள் ஏலக்காய் உழவுப் பெருமக்களுக்குப் பயனளிக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்து வருவதும் ஏற்றிப் போற்றப்பட வேண்டிய செய்தி ஆகின்றது.

அரேபியக் கடலின் ராணியாக விளங்கும் கேரளத்தில் கொச்சியைச் சேர்ந்த ஏர்ணாகுளம் நகரில் வாசனைத். திரவியங்களின் ராணியாகத் திகழும் ஏலக்காய்க்கான வாரியம் செயற்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சகத்தின் நிர்வாக மேற்பார்வையில் செயலாற்றும் வாரியத்தின் தலைவர், வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோரை மத்திய அரசுதான் நியமனம் செய்யும்.

வாரியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படுவது சட்ட மரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/72&oldid=505982" இலிருந்து மீள்விக்கப்பட்டது