பக்கம்:ஏலக்காய்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் படிப்பிற்கான உதவிப் பணமும் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர் நலன் ஏலச் சாகுபடியைப் பொறுத்த மட்டில் வெகு பொறுப்போடு பேணிக் காக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏலக்காய் ஏற்றுமதிகளை முன்னேறச் செய்திட, ஏற்றுமதியாளர்களுக்கு 10% அளவில் ரொக்கப்பணம் ஈட்டுத்துணையாக விநியோகம் செய்யப்படுகிறது.

ஏலக்காயை உலர்த்தவும் பதப்படுத்தவும், ஏல விவசாயிகளுக்கு நிதி உதவிகளை வாரியம் அளிக்கும். அப்போதுதானே ஏலக்காய் தர நிலைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கி அக்மார்க் முத்திரை பெற்று, வெளி நாடுகளில் போட்டி போடவும் முடியும்!வாரியம் மேற்கொண்டுள்ள தீவிரச் சாகுபடி முறை நடவடிக்கைகளும் விரிவாக்க ஆலோசனைத் திட்ட நடைமுறைகளும் விவசாயிகளிடையே செல்வாக்குப் பெற்றிருப்பதும் உண்மை. ஏலக்காயைச் சேமித்து வைப்பதற்கான வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏலப் பயிர் விளைச்சல் பகுதிகளுக்கு மறுநடவு உதவித் தொகைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏல விவசாயம் செய்ய முன்வரும் பங்குடி மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் ஒன்றும் அமல் நடத்தப்படுகிறது.

நோய்த்தடுப்பு, பயிர்ப் பாதுகாப்பு, தேன்கூடு ஏற்பாடு மற்றும் பாசனக் குழாய் அமைப்புக்கான நிதி உதவிகளையும் வாரியம் வழங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/77&oldid=505988" இருந்து மீள்விக்கப்பட்டது