பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 13-4-85 91 தமிழர் முன்னேற்றக் கழகம் செயல்படுகின்றது. தமிழ் குழந்தைகளுக்கெனச் சனிக்கிழமை தோறும் வகுப்புகள் நடத்தும் பள்ளி ஒன்று திருவள்ளுவர் பெயரால் உள்ளதோடு, தமிழர்களை ஒன்று சேர்த்து, கூட்டங்கள் விழாக்கள் நடத்துவதாகவும் கூறினர். பலர் நல்ல தமிழ் நூல்களை தங்களுக்கெனவே வாங்கி வைத்திருந்தனர். விடுதலை இதழ் இங்கே பலர் வாங்குகிறார்களாம். வெளிநாட்டுத் தமிழர்களுக்கெனவே விடுதலை, சிறிய அளவில் முக்கிய நிகழ்ச்சிகளை அடக்கிக் கொண்டதாக, கிழம்ைக்கு ஒருமுறை வெளியிடப்பெற்று இவர்களுக்கும் பிற நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் அனுப்பப்பெறுகிறது: கையடக்கமாக முக்கிய நாட்டு நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவர்கள் திரு.வி.க. நாற்றாண்டு விழாவினைக் கொண்டாடி மலரும் வெளியிட்டுள்ளனர். பரந்த தமிழ்நாட்டின் படம் ஒன்று அச்சிட்டு (பிற மாநிலங்களிலும் ஈழத்திலும் இணைய வேண்டிய பகுதிகள் காட்டி) பல்ருக்கும் அனுப்பியுள்ளனர். இதன் மூலப்படம் சென்னை கோட்ம்பாக்கத்தே உள்ள 'தமிழர் விடுதலை இயக்கம் வெளியிட்டுள்ளது. இவர்கள் தனியாகக் கையெழுத்துப் பிரதியாகத் (படிகள் எடுத்து) திங்கள் வெளியீடும் வெளியிடுகின்றனர். இவர் க ள் அனைவரும் தீவிரமான தமிழ்ப்பற்றும் தமிழ்நாட்டு வாழ்வில் அக்கறையும் கொண்டுள்ளனர். இவர்கள் தமிழகம் திரும்ப வும் விழைகின்றனர். வீட்டு முகப்பில் பாரதிதாசன் பாடல் களைப் பொருத்தி வைத்துள்ளன்ர். இங்கே உள்ள வேறுசில தமிழ்க் குடும்பங்கள் வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர். எங்கும் ஒரே வகை உணர்வினைக் கண்டேன். இவர்களிடம் உள்ள உள்ளக்கிளர்ச்சியும் உணர்ச்சியும் தமிழ் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இடையே உண்டானால் தமிழும் தமிழரும் எவ்வளவோ வகையில் முன்னேற முடியுமே என எண்ணினேன். அனைவர் பற்றினையும். பாராட்டிப் போற்றினேன். - பிறகு இங்குள்ள கல்விமுறை, சமுதாய வாழ்க்கை நெறி முதலியனபற்றிக் கேட்டறிந்தேன். பள்ளிகளில் தமிழ்