பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO2 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வகையில் விளங்கவைக்க ஏற்பாடு செய்யுமாறு - எழுதுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்" என்று அன்று காஞ்சியில் பேசினார். மாண்புமிகு வீர்ப்பன் அவர்கள் அவர்தம் கருத்தும் இந்த ஆங்கிலநாட்டுக் கல்வி அதிகாரியின் கருத்தும் ஒத்து இருக்கும் நிலையினை உணர்ந்து தக்கவர் சரியே நினைப்பர் என்ற தொடரி ைன நினைந்தேன் . மகிழ்ந்தேன். ஆயினும் இந்த ஆய்வாளர்கள் பெரும் சமுதாயத்தை நினைப்பார்களா என்ற ஐயம் என் மனதை விட்டு அகலவில்லை. - 'பயிலும் மாணவர்களும் பயிற்றும் ஆசிரியர்களும் நிலைகுலைந்துள்ள நிலைபற்றியும் கூறினார். ஏதோ தேர்வு - எப்படியோ வெற்றி என்ற இன்று ள் ள நிலை மாறவேண்டும் எனவும், பட்டங்கள்தாம் உத்தியோகங் களுக்கு அடிப்படை என்ற நிலை மாற, செயல்திறனும் உண்மை உழைப்பும் செறிந்த அறிவுமே அளவுகோலாக அமையவேண்டும் எனவும், அந்த நிலை உண்டாகும் வரை யில் நாட்டிலும் எந்தப் பணித்துறையிலும் அமைதியும் பயனும் காண இயலாது எனவும் விளக்கினார். அவர்தம் சுமார் 40 ஆண்டுகளின் கல்வித்துறை அனுபவங்களையும் பல நாடுகளில் கல்வி அமைப்புகள் பற்றியும் சுட்டினார். இவ்வாறு இந்நாட்டுக் கல்விபற்றியும் நம்நாட்டுக் கல்விபற்றி யும் பலப்பல விளக்கங்கள் தந்தார். பின் வேறு கூட்டத்துக் குச் செல்லவேண்டிப் புறப்பட்டார். அவருடன் இங்குள்ள பள்ளியின் நிர்வாகத் தலைவர் திரு. நாகநாதன் அவர்களும் வந்திருந்தார். - இரவு 8-30க்கு மேல் திரு. வீரசிங்கம் அவர்கள் வந்திருந்து, அவர்கள் உடன் தாயகம் திரும்ப இருப்பதாகவும் அங்கு வாழவேண்டிய முறைகள்பற்றியும் விளக்கி, விரைவில் புறப்படப்போவதையும் கூறினார். அவர்தம் மொழிப் பற்றும் இனப் பற்றும் விளக்கமுடியாதன. எனினும் தமிழகம் வரின் அவை தேயுமே என எண்ணினேன். நெடுநேரம் அவருடன்