பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f30 - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தற்போது அதில் பலவித செப்பனிட்டு வேலைகள் நடை பெறுகின்றன. சுற்றிலும் இரும்புச்சாரங்கள் இடப்பெற்றிருந் தன. உள்ளே கட்டடத்தில் அதன் தோற்றம் - அமைப்பு . அந்த உயரத்துக்கு அது நடைபெறும் பராம்ரிப்புப் பணிகாலங்கள் - செயலாற்றியவர் பற்றிய குறிப்பு ஆகியவை படங்களோடும் விளக்கங்களோடும் இருந்தன . அங்கே அவற்றை விளக்கியும் உரைத்தனர். அமெரிக்க மக்கள் விடுதலைச் சின்னமாக . அவர்கள் வாழ்வின் ஒளி விளக்காக இது போற்றப்பெறுகிறது. மிக உயரமாக உயர்த்திய கையில் ஒளிப்பந்தம் தாங்கி உலகிற்கே விடுதலையின் பொருளை விளக்கும் வகையில் அச் சின்னம் இருந்தது: கண்டு மனத்தில் வாழ்த்தினேன். அச் சிறு தீவினைச் சுற்றிலும் கருடன்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றுள் சில முற்றிலும் வெண்மையான நிறத்துடனே காட்சி தந்தன. தூரத்தே பல தீவுகள் இருந்தன. வானில் அடிக்கடி ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தது. நாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு (அண்ணா நகரிலிருந்து மாம்பலம்)செல்லக்காரினை உபயோகிப்பது போன்று இங்கு இதை உபயோகிக்கிறார்கள். பலர் சொந்தமாகவே வைத் திருக்கின்றனர். தீவினைச் சுற்றிப்பார்த்து, வெற்றித் திருவினை வாழ்த்தி, மறுபடியும் கப்பல் ஏறி 2.30க்கு உந்து, வண்டி உள்ள இடம் வந்தோம். மறுபடியும் எங்கள் பயணம் தொடர்ந்தது. 17-ம் நூற்றாண்டில்-கட்டிய கோயில்கள், தொங்கு பாலங்கள் :400 500 (இடையில் ஒரு தாங்கியும் இல்லை), கடலோரக் காட்சிகள் இவற்றைக் கண்டு கொண்டே வந்தோம். 3மணி அளவில் பெருமழை தொடங்கிவிட்டது. ஒரு பகுதியில் பலர். உணவு உட்கொண்டனர். பின் 3-30க்குப் புறப்பட்டு, முக்கிய இடங்களைக் கண்டோம். ஐக்கியநாடுகள் சபை (U.N. 0.) பல நாட்டுக் கெர்டிகள் பறக்க (நம் நாட்டுக் கொடியும் சேர்ந்து) உயர்ந்து காட்சி தந்தது. நம் நாட்டுப் பெருந்தலைவர்கள். இந்திரா காந்தி-இங்கிருந்து பேசிய