பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 19-4-85 183. மருந்தாயிருந்தாலும் நேராக வாங்க முடியாது. மருத்துவர் குறிப்பு வழியே பெறவேண்டியிருந்தமையால், மருத்து வருக்கு நல்ல கிராக்கி இருந்தது. மருந்தகத்தில் ஒன்று ஜர்மன் நாட்டு கவிஞர் திரு. கத்தே அவர்கள் (Guathe) பெயரில் அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பலப்பல பெரிய உணவு விடுதிகள், தங்கும் இடங்கள் ஊரெங்கும் பரவி இருந்தன. சில கடைகளின் வாயிலில் வைத்துள்ள மனித அளவுள்ள பொம்மைகள் உண்மையாகவே மனிதர் களே என்று எண்ணுமாறு அமைந்துள்ளன. இவ்வாறு பலப் பல கடைகளைக் கண்டுகொண்டே மாலை 5 மணிக்கு புறப் பட்ட இடத்திற்கே உந்துவண்டி வந்தது. அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. நல்லவேளை, பாதாள ரெயிலுக் குப் புகும்வழி பக்கத்திலேயே இருந்ததால் தப்பித்தேன். உள்ளே புகுந்து உரிய டிக்கெட் எடுத்து, இரெயில் ஏறி வீடு திரும்பினேன். நியூயார்க் உலக மக்களையெல்லாம் தன்னிடம் பவவகையில் ஈர்க்கும் நிலையினையும் செல்வ வளத்தினையும் இயல்புகளையும் இரவு பகல் இல்லா நிலை யினையும் உயர்ந்த கட்டிடம், உயர்ந்த சிலை, உயர்ந்த வாழ்வு இவை பெற்ற தன்மையினையும் எண்ணி எண்ணி வியந்து உறக்கங்கொண்டேன்.