பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் எழுத்து (Brahimi) உள்ளதைக் குறித்துள்ளனர். அக்காலத் தில் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியான் ஏலம், இலவங்கம், மல்லி, க்டுக்காய், ஜாதிக்காய் போன்றவற்றையும் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். இவை நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பெற்ற குறிப்பும் கண்டேன்.தமிழ்நாட்டுக் கான உருவம் இல்லையாயினும் புத்தர் உருவம் இருந்தது - (இந்தியாவில் தோன்றியது என்ற குறிப்பும் இருந்தது.)தென் ஆசியாவில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த பண்பாடு Pileistocene' இருந்தது என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது. - - பின் முதல் தளத்துக்கு வந்தேன். இங்கே கடல்படு பொருள் க ள் - பலப்பல வகை மீன்கள் . பிற இடம் பெற்றுள்ளன. குதிரை போன்ற உயிரினங்களின் வளர்ச்சி, அமைப்பு முதலியனவும் உள்ளன. கடல்படு பலகறை, சங்கு, கிளிஞ்சல் ஒடுகள் பலவாக வைக்கப்பெற்று விளக்கமும் தரப்பெற்றுள்ளன. Metebrites என்ற விண்வீழ்கற்கள் வைரங்கள் - கற்கள் - உலகில் பல பாகங்களில் உள்ளவை அழகாக அடுக்கி வைக்கப்பெற்றுள்ளன. எத்தனை விதமாக வண்ணக்கற்கள்.அவைகளுக்கேற்ற வைரங்கள்-நவரத்தினங் 'கள்-மரங்கள் அறுத்து வைத்த வைரம் போன்றவை-முற்றிய பெருமரங்களின் உள்ளிட்டுக்கற்கள் இவை பலப்பல வகை யில்அமைக்கப் பெற்றிருந்தன.ஒளியுள்ள முற்றிய மரங்களின் வண்ண்க்கற்கள் போன்ற தன்மை எனக்கு மூங்கிலில் முத்து விளையும்' என்று நம் நாட்டு பெரியவர் சொல்லும் சொற் களை உண்மை என்று காட்டிற்று. . இவ்வாறு எத்தனையோ வகையில் அணுவிலிருந்து - அண்ட முகடுவரையில், கல் தோன்றி மண் தோன்றாக் கால் முதல் அமைந்த உயிரின வாழ்க்கை முத்ல் இன்றைய வாழ்வு வரையில் பலவகையில் பொருள் காட்சியை அமைத் தவர்களைப் பாராட்டாதிருக்க முடியவில்லை. இவற்றுள் சில பகுதிகள் தனியார் சேகரித்துத் தந்தவை என்ற குறிப்