பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் 22-4.85 15: இவ்வாறு ஒருவாரம் நியூயார்க் நகரில் உலகப்பெருநகர் ஒன்றில் இருந்து பலப்பல கண்டும் பலப்பல கேட்டும் ப்ல. உண்மைகளை உணர்ந்தேன். எனவே மனநிறைவோடு நாளை காலை இங்கிருந்து பிளடெல்பியா புறப்பட ஆயத்த மானேன். அன்பர் இராதாகிருஷ்ணன் அவர்கள் பயணத் துக்குரிய பதிவு முதலியன செய்து கொடுத்தார். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து 11மணி அளவில் உறங்கச் சென்றோம். நாளை பிளடெல்பியாவில் இருந்து எழுதுவேன்.