பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வரவேற்பு அறை, பார்க்க வருபவர்கள் அறை, பதிவு அறை போன்றவையும் பிறவும் செம்மையாக உள்ளன. அகன்ற தாழ்வாரம். அங்கே எங்கு பார்த்தாலும் பல்கலைக்கழக மாணவர் . ஆணும் பெண்ணும் - உட்கார்ந்துகொண்டு, தத்தம் பாடங்களைப் படித்துக் கொண்டும் - படங்கள் வரைந்து கொண்டும் . ஆய்வுகள் செய்துகொண்டும் இருந்த காட்சி, இது விடுதியன்று பல்கலைக்கழகமே என்ற உணர்வைதான் உண்டாக்குகிறது. பல நாட்டு மாணவர் பல துறையினர் தங்கிப் பயின்றனர். \ - இதன் வாயிலில் பல மொழிகளில் வரவேற்பும் வாழ்த்தும் இட்டுள்ளமை போன்றே, தமிழில் வணக்கம்' என்ற சொல்லும் பொறிக்கப் பெற்றிருப்பதைக் குறிக்கக் கடமை பட்டவனாவேன். மாலை நகரினை ஒரு பக்கம் அப்படியே சுற்றிப் பார்த்தேன். இந்நகர் நடுவே இரு ஆறுகள் செல்லுகின்றன. ஒன்று பேராறு, அதில் கலங்கள் வாணிபத்தின் பொருட்டு உலாவுகின்றன. எங்கும் இத்தகைய ஆறுகளே ஊர்களுக்கு அழகூட்டுகின்றன. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்ற ஒளவை மூதாட்டியின் அருள்வாக்கு என் நினைவிற்கு வந்தது. நான் கண்ட் பெருநகரங்களின் நடுவிலெல்லாம் - ஜினிவா, பாரிஸ், உரோம், லண்டன், நியூயார்க், பிளடெல் பியா ஆகிய எல்லா ஊர்களிலும் ஆறுகள் ஊடுருவிச்செல்லு, கின்றன. ஒளவையின் நகரமைப்பின் அறிவுத் திறனைப் போற்றாதிருக்க முடியவில்லை. (நம் சென்னைக்கும் கூவம், அடையாறும் இல்லையா: தில்லிக்கு யமுனை: கல்கத்தா விற்கு கங்கை இல்லையா) ... • இங்கே பல்கலைக் கழகத்தின் சார்பிலே ஒரு நாளிதழும் ஒரு வார இதழும் நடைபெறுகின்றன. நாளிதழ் நம் நாட்டு "இந்துப்பத்திரிகை அளவில் இருக்கிறது. வாரப்பத்திரிகை யும் சற்று பெரியதே. அதில் பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, பிற நிகழ்ச்சிகளும் நிறைந்த விளம்பரங்களும் இடம் பெறுகின்றன. (விரசமான விளம்பரங்கள் இல்லை)