பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிளடெல்பியா 24.4.86 159 கடிதம் எழுதியவரும் திருமதி ரோசனே ரோச்சர் (Dr. Rosane Rocher) என்னை வரவேற்று உபசரித்தார். இவர் கணவரும் இப்பல்கலைக்கழகத்திலேயே வேலை செய்பவர். இவரிடம் பயின்றவர், இன்று சென்னை தூதரகத்துத் துணைத் தூதுவராகப் பணியாற்றுகின்ற திரு. சன்ஸ்டெட் (Dr. Joffroyl. Sunstead) அவர்கள், எனக்கு விசா வழங்கும்போது அதுபற்றிச்சென்னையில் சொன்னார்கள்.நான் இவ்ர்களைக் கண்டதும் தூதுவர் பற்றிக் கூறி, அவர் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளச் சொன்னதையும் கூறினேன். அவர் களும் மகிழ்ச்சியோடு, அவரை நன்கு அறிவதாகவும் நன் மாணவராக அவர் இருந்து சென்றதையும் கூறினார்கள். வணக்கம்' என்ற சொல்லை இங்கே பயில் கின்ற மாணவர் கூறி வரவேற்கின்றனர். நான் தங்கியுள்ள விடுதியின் முகப்பிலே. வரவேற்பறையிலே வணக்கம்' என்ற சொல் தமிழிலேயே எழுதப் பெற்றிருப்பதை முன்னரே குறிப்பிட் டேன். தலைவருடன் குறிப்பிட்ட ஆய்வு அறையை அடைந்தேன். - இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெற்ற கட்டுரை கள் மூன்று. மூன்றும் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை. focārg). “Balias A Biographer “argir y u(d5érmi eggifurf (முகமதியர்) வாழ்க்கைக் குறிப்புப் பற்றியது (19-ம் நூற்றாண்டு).மற்றது தமிழகத்தின் 9-12 நூற்றாண்டுகளில் சூரிய வழிபாட்டு வ ள ர் ச் சி (புகைப்படங்களுடன்), மூன்றாவது, பூட்டோ ஆட்சியில் பாகிஸ்தான் என்பது. ஒவ்வொன்றின் கருத்து அமைப்புகளையும் (தலைவர் முதலில் அறிமுகப்படுத்தி) எழுதிய "எம். ஏ. மாணவர் விளக்கி உரைக்க, அங்கே அமர்ந்த பேராசிரியர் பலர் உள் படப் பலரும் பலப்பல வகையான கேள்விகளைக் கேட்டனர். அவற்றிற்கெல்லாம் தக்க விடைகளைக் கூறி, விளக்கம் தந்து, தாம் நிறுவிய கருத்துக்களுக்குச் சான்று காட்டி விளக்கம் தந்தனர். முடிவுரை கூறியபின், அனைவர் இசை வின் பேரிலும் அவர்தம் கட்டுரை ஏற்றுக் கொண்டதாக முடிவு செய்யப் பெற்ற பின்பு அடுத்த மாதத்தில் இவர்கள்