பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாஷிங்டன் (D.C) 28-4.85 187 இங்கே பணியாற்றுகிறார். இவருக்கும் அங்கேயே இருக்க இடம் தந்துள்ளனர். - சரியாக 3 மணிக்கு இரு அமரிக்கப் பெண்மணிகளும் வேறு சிலரும் வந்தனர். மேல் அறையில் டி.வி'யில் சுவாமி சின்மயானந்தா கர்ம யோகத்தைப் பற்றிப் பேசியதை அப்படியே (வீடியோ வழி) கொண்டுவந்தனர். இயல்பாகவே அமைந்த அந்தச் சொற்பொழிவை நேரில் கேட்பது போலவே அனைவரும் அமைதியாகவும் உணர்வோடும் கேட்டு மகிழ்ந்தனர். 4.30 வரை அந்தச் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தோம். பிறகு அங்கே வழிபாடு ஆற்றிய அந்த அந்தணர் கொடுத்த 'டி' குடித்து, நகர் நலம் காணப் புறப்பட்டோம். இலர் வழி முன்னரே பலவிடங்களைக் கண்டிருந்த போதிலும் மறுபடியும் அனைத்தையும் காட்ட அழைத்துச் சென்றார் அன்பர் சதானந்தர். வாஷிங்டன் எல்லையில் ஆறு பல்கலைக் கழகங்கள் உள்ளன என்றும் சில தனியார் நடத்துவது என்றும் அதற்கென மத்திய அரசோ (Federal Govt) மாநில அரசோ (State Govt) எந்தவிதமான சட்டமும் இயற்றுவதில்லை எனவும் தனித்தனியாக அவை ஒவ்வொன்றும் பாடத் திட்டம் முதலியவை அமைத்துத் தேர்வு நடத்திப் பட்டங் கள் வழங்குகின்றன என்றும், அவற்றை அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளுகிறதென்றும் எனவே மாணவர் பலர் வந்து சேருகிறார்கள் என்றும் கூறினர். ஆயினும் நான் முன்னமே சொல்லியபடி, படிப்புச் செலவுதான்மிக அதிகம். அவற்றுள் go orporá)u ‘John's Hopkins University'ujangoré sairGLoir. பிற பல்கலைக் கழகங்களையும் ஒரு முறை சுற்றிப் பார்த் தேன். - - வாஷிங்டன் அமரிக்க நாட்டுத் தலைநகர் அல்லவா! எனினும் நம் நாட்டைப்போல், அரசாங்க அலுவலகங்கள் வியாபார நிலையங்கள், நீதிமன்றங்கள், பிற முக்கிய நிலையங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துக்