பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கொண்டனர். என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவர் களுடன் காரில் அவர்தம் இல்லம் சென்றோம். இருவரும் நல்ல தமிழில் பேசினர். திரு. கோபால் சர்மா அவர்கள் சென்னையில் பயின்றவர். கிறித்தவ உயர்நிலைப்பள்ளி, கல்லூரியில் பயின்று முதல்நிலையில் சிறக்கத் தேர்ச்சி பெற்றவர். அதே போல் தற்போது அவர்தம் மகனாரும் (9வது பயில்கிறார்) முதல் நிலையில் இடம் பெறுகிறாராம். அவர்கள் பாஸ்டன் நகரைப்பற்றியும், அதன் அமைப்பு வளர்ச்சி முதலியன பற்றியும் கூறிக்கொண்டே 30கல் தொலைவிலுள்ள தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்தம் வீட்டிற்குச் சின்மையா' என்றே பெயரிட்டிருந் தனர். வீட்டில் அவர் தாய் தந்தையர் இருவரும் இருந் தனர்; என்னை அன்போடு வரவேற்றனர். அவர் தம் அன்னையாருக்கு என் வயது (1914லில் பிறந்தவர்) தந்தையார் மூத்தவர். எனினும் அனைத்து வேலைகளையும் செய்கிறதோடு, சமய ஆராய்ச்சிகளிலும் கலந்து கொண்டு மகிழ்கின்றனர். அவர்களும் அவர்தம் மக்கள் மூவரும் சின்மயானந்தர் அவர்கள் வழி, தீக்கை பெற்றுத் தொண்டு செய்கின்றவர் என அறிந்தேன். அவர்தம் குடும்பம் முற்றுமே சின்மையா திருமடத்தின் தொண்டாற்றும் நிலை அறிந்தேன். திரு. சர்மாவின் மகனாரும் இங்கே உள்ள தற்கால மாணவர் போன்று இன்றி, தெய்வபக்தி சான்றவ ராக இருந்ததை கண்டேன். நம் நாட்டிலிருந்து வந்துள்ள வர் தம் பிள்ளைகள் நம் மரபு நெறி மாறி மாற்று வழியில் செல்வதால் ஊர் திரும்புவோமோ என எண்ணும் பல குடும் பங்களை கண்ட எனக்கு இவர்தம் குடும்பம் நம் பண்பாட்டில் நிலைத்துள்ளமை மகிழ்வைத் தந்தது. பெரும்பாலும் நான் தங்கிய வீடுகள் இதே நிலையில்.நம் மரபு காக்கும் நிலையில் உள்ளமை எண்ணி மகிழ்ந்தேன். வீட்டில் எல்லாப் பக்கங்களையும் காட்டினர். எங்கும் தெய்வமணம் கமழ்ந்தது. பகல் உணவுக்குப் பிறகு சிறிது ஒய்வு கொண்டோம். அதற்குள் வெளியே (இன்று ஞாயிறு)