பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந் நாட்டில் மக்களுக்கு முழு உரிமை தந்துள்ளனர். பேச்சுரிமை, எழுத்துரிமை செயல் உரிமையாகிய பலவற்றில் மக்கள் உரிமை பெற்று வாழிகின்றனர். ஆயினும் அவ் வுரிமை சமுதாய நலத்தை அரசாங்கத்தை பாதிக்கு மானால் அரசு பார்த்துக்கொண்டிராது. தொழில் துறை அதனால் வேகமாக முன்னேறுகிறது. பல தனியார் நிறுவனங்கள் பெரும்பெரும் தொழிற்சாலைகளை நிறுவி நாட்டுக்கு நலம் செய்கின்றன. உலகில் ஐந்தில் இரண்டு பங்கு (2/5) தொழில் வளம் இங்கேயே உள்ளது. உணவுப் பொருள் தயாரிப்பதில் இந்நாடு. சிறப்பாக நியுயார்க் மாநிலம் - முன்னிற்கின்றது. மகளிர் எல்லாத் தொழில் நிலையங்களிலும் பங்கு பெறுகின்றனர். தொலைக்காட்சி, தானியங்கி இயந்திரங்கள் - எலேக்ட்ரானிக் இயந்திரங்கள், பால் பண்ணை முதலிய அனைத்திலும் பெண்கள் பெரும் பங்கு கொள்ளுகின்றனர். ஒலி அளவில் தொலைபேசி (தொடாமல்) இயங்குகிறது. உலகின் ப்யன்பெறும் அழுத்தக் காற்று (gas) வகையில் 60% இங்கேதான் உள்ளது. 20% நிலக்கரி 16% பெட்ரோலியம் இந்நாட்டில் உள்ளன. உலக ஆய்வு நிலையங்களில் பல இங்கேதான் உள்ளன. பல்கலைக் கழகங்களிலும் சிறந்தவகையில் ஆய்வு நடைபெறுகின்றது. ஹாஸ் ஏஞ்சல்ஸ் (Hos Angiles)ல் உலகெங்கும் காணாவகை யில் மாற்றுச் சுரங்கப் பாதை உள்ளது என்றனர் - பல வளைவுகள் பலபடிகள் அதில் உள்ளனவாம். இந்நாடு ஆண்டுதோறும் 365 மில்லியன் உலகவாணிப வளனும் 500 கோடி டாலர் உள்நாட்டு வாணிப வளரும் பெற்றது. இங்கே 12.5 கோடி தொலை பேசிகள் உள்ளவாம். ஒரு நாளில் 4.70 கோடி முறை பேசுகிறார்களாம். 7500 வானெலி நிலையங்களும் 900 தொலைகாட்சி நிலையங் களும் உண்டாம். (அனைத்தும் தனியார் உடைமை) உரிமை பெற்ற நாளில் (1766) 30 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 20 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பாஸ்டன் நகரில்தான் உரிமைப் போராட்டம் நடைபெற்றதெனக் குறித்தேன். 4.7.1776ல் உரிமை