பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் (aேs - இங்கே Petrol ஐ அவ்வாறு அழைக்கின்றனர்) போட்டுக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்கு இரண்டு டாலர் (சுமார் 25 ரூபாய்) கட்டினார். நாங்கள் உள்ளே உட்கார்ந்தே இருந்தோம். சுமார் 30 40 அடியுள்ள ஒரு பெருமுழையுள் கார் சென்றது. நாற்புறமும் தண்ணீர் கொட்டிற்று. பல விசிறிகள் கீழும் மேலும் சுற்றிலும் தூய்மைப்படுத்தின. நல்ல நுரை (சோப்) கலந்த நீர் மேலும் பொழிந்தது. பின் மற்றொரு துடைக்கருவி அனைத்தையும் தூய்மைசெய்தது. எல்லாம் இரு நிமிடங்களே; கர்ர் வெளியே புறப்பட்டது. குறைந்த நேரத்தில் - குறைந்த செலவில் . இவ்வளவு தூய்மையாகக் காரைத் துப்புரவு செய்யும் வழக்கம் நம் நாட்டில் இல்லையே என வருந்தி னேன் (முன் பதிவு செய்து, மூன்று மணி நேரம் காத்திருந்து .50, 60 ரூபாய் கொடுத்து எப்படியோ தூய்மை செய்து - ஆளுக்கும் கைக்காசு கொடுத்து அங்கே நாம் படும் அவதியை நினைந்தேன்) பின் கார்' நேராக நகர் நோக்கிச் சென்றது. . . நகரின் பெருந்தெருக்கள் வழியே செல்லும் போது, எல்லாக் கட்டடங்கள் பற்றியும் அவற்றில் உள்ள பணியகங் கள் பற்றியும் பிற பற்றியும் விளக்கிக் கொண்டே வந்தார். சாலை அமைப்பு, அவற்றின் எண்கள் - தெற்கு வடக்காகச் செல்வன ஒற்றை எண்பெற்றன - மேற்குக் கிழக்காகச் செல்வன இரட்டை எண் பெற்றன. இணைக்கும் சாலைகள் எந்த எண் பெற்றன. என்பவற்றையெல்லாம் விளக்கி, புதிதாக வருபவரும் எளிமையாகப் பயணம் செய்யும் வகை யில் அவை அமைந்த சிறப்பினைச் சொன்னார். நேராக நாங்கள் இந்நகர் எல்லையில் அமைந்த ஒரு பெரிய ஏரிக்கரையை அடைந்தோம். இடையில் ஒரு ஆற்றினைக் கடந்தோம். இந்த நாட்டினையும் வடக்கே உள்ள கனடாவையும் ஐந்து பேரேரிகள் பிரிக்கின்றன என்றும், சிகாகோவிற்கு மேற்கே உள்ள இரண்டு பேரேரி களும், சிகாகோ ஏரியும் இந்த ஊர் ஏரியும் இதற்குக் கீழ்