பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு-சிகாகோ 12-5.85 27: உள்ள நியூயார்க் - பாஸ்டன் இவை ஒட்டிய பேரேரியும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்நாட்டு வாணிப வளனை அட்லாண்டிக் சமுத்திரத்துக்குக் கொண்டு வருகின்றனவாம், இவையாவும் தான் நியாகார வீழ்ச்சியாகி, அடுத்துள்ள பேரேரிக்குச் செல்கின்றனவாம். (அங்கே கப்பல்கள் போக வேறு ஆற்றின் வழி பயன்படுத்தப்படுகின்ற தாம்) இவை அனைத்தும் மாரிக்காலத்தில் - குளிர்காலத் தில் உறைந்து பனிக் கட்டியாகி விடுமாம்: ஒரு போக்கு வரத்தும் இருக்காதாம். அங்கே கரையில் ஆயிரக்கணக்கான சிறுபடகுகள் இருந்தன. கோடை நாட்களில் (ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்) இங்கே பெரும் கூட்டம் இருக்குமாம். பொழுது போக்குக்காக வந்து, படகில் உல்லாசப் பயணம் செய்வார்களாம். அதன் பரந்த நீர்ப்பரப்பை நோக்கினேன். மறு கரை தெரியவில்லை. எனவே இதைக் கடல் எனலாம் என்றேன். இந்தக் கரையை ஒட்டி, கப்பல்கள் காற்றில் அசையாவண்ணம் சுற்றிலும் தொலைவில் (நம் சென்னைத் துறைமுகம்போல) சுவர் எழுப்பி உள்ளனர். உள்ளே சில சாமான்கள் ஏற்றிய கப்பல்களும் இருந்தன. இயற்கை அமெரிக்காவுக்கு வாரி வழங்கும் பெருஞ்செல்வ நிலையை எண்ணினேன். நம் நாட்டில் மூவாயிரம் கல் கடற்கரை இருந்தும், பம்பாய் தவிர்த்து, மற்ற இடங்களில் இத்தகைய இயற்கை நலம் இல்லையே என எண்ணினேன். நெடிது நின்று நினைந்து, பின் ஊருக்குள் புகுந்து பல காணத் தொடங்கினேன். - இந்த ஊரிலும் இரு பெரும் பல்கலைக் கழகங்களும் வேறு பல கல்வி நிலையங்களும் உள்ளன. ஒரு பல்கலைக் கழகத்தே பெரும்பாலும் ஆய்வு செய்பவர்களே மிகப் பெரும் பான்மையாக உள்ளனர் என்றும் வேளாண்மை, மின்துறை முதலிய இங்கே சிறப்பிடம் பெறுகின்ற தென்றும் கூறினார். இன்று விடுமுறையானதால் உள்ளே சென்று காண முடிய வில்லை, நல்ல நூல்நிலையமும் தெளிவான ஆய்வு அரங்கங் களும் கண்ல நலம் போற்றும் பேரரங்கமும் உள்ளனவாம்.