பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இயற்கை அன்னை அந்த அளவிற்கு என்னை விட்டுவைக்க வில்லை. முன் நாள் இரவு (14.5.85) சிறு மப்பும் மந்தார மாகி இருந்த நிலையில் இரவில் மழை பெய்தது. ஒருவேளை என்னையும் என் உள்ளத்தையும் குளிரச் செய்யவேண்டும் என்றேதான் தொடக்க முதல் மழை பெய்துக் கொண் டிருந்ததோ என எண்ணி, இறைவனை வணங்கினேன். நேற்று, காலை முதற்கொண்டே கதிரவன் தோற்ற மில்லை. சிறு தூறல் இருந்து கொண்டே இருந்தது. இரவு திரும்பும்போது நல்ல மழை நெடுக இருந்தது. நான் தங்கியிருந்த பகுதியில் (Mount Prospect) நாங்கள் திரும்பு முன்பே நல்ல மழை பெய்து இருந்தது. நான் வந்ததும் அயற்சி மிகுதியால் படுத்து விட்டேன். இயற்கை அன்னை என் அகப்புற வெப்பநிலையினைத் தகைத்து இனிய குளிர் காற்றினை வீசச் செய்தாள். பக்கத்திலிருந்த போர்வை யினை, கடந்த மூன்று நாட்களில் பயன்படுத்தாத நான், இரவு பயன்படுத்த வேண்டி வந்தது. திறந்திருந்த சன்னல் கதவுகளையெல்லாம் மூடவேண்டிவந்தது. அறை தண்ணி தாக, இதுவரையில் எங்கும் இருந்ததுபோல், நல்ல அன்னை யின் குளிர்மடியென எனக்கு அமைந்தது. நல்ல உறக்கம் பெற்றேன். இன்று காலையிலும் அதே இன்பநிலை. எனைப் பிரியா இறைவனையும் இயற்கை அன்னையினையும் கைதொழுது உளத்தால் வாழ்த்தி என் பணி மேற்கொண் டேன். + - காலை எழுந்ததும் திரு. கிருஷ்ணன் அவர்களை இந்த தட்பவெட்பநிலையின் மாற்றம் பற்றிக்கேட்டேன்.அவர்கள் இந்நகருக்கு காற்று நகர் (wind City) என்றே பெயர் என்றும், வடக்கே உள்ள பேரேரியில் பட்டு வரும் காற்று மிகக் குளிர்ச்சியுடையதாக இருக்கும் என்றும், இந்த இளவேனிற் காலத்திலும் இத்தகைய மாற்றம் நடைபெறு மென்றும் கூறினார். (எப்படியாயினும் என் நிலை தெளிய வைத்த இயற்கை அன்னையை வாழ்த்தினேன்.) மேலும் இச் சிகாகோ நகரின் பெயர்க் காரணத்தையும்