பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பின்பே, இவை அனைத்தையும் கற்றுக் கொண்டதாகச் சொன்னார். நீர்ப்பாய்ச்சுதலுக்கு நீண்ட குழாய் அமைத்து பத்தடிக்கு ஒன்றாக வெளியே சுற்றுக் குழல் அமைத்து, அதில் தானாகக் குறித்த வேலைகளில் தண்ணிர் சுழற்சியில் பக்கத் தில் உள்ள செடிகளுக்கு நீர்பாய்ச்சும் தானியங்கி முறை யைச் செய்துள்ளார். 150 ஆழம் பாறையில் கிணறு தோண்டி, அதற்கென மின் குழாய் அமைத்து, தன் மாளிகை சுற்றிலும் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள செடிகள், கொடிகள், பூஞ்செடிகள், புல்தரை ஆகியவற்றிற்கு நீர்ப்பாய்ச்சுகிறார். மற்றைய சுமார் 15 ஏக்கர் நிலம் வளர்ந்தோங்கிய மரங்கள் அடர்ந்த காடாக உள்ளது. இன்னும் வேலியும் இடவில்லையாம். சென்ற ஆண்டு இடையில் ஒரு சிறு ஏரியே (குட்டை) உண்டாக்கி, அதிலே 2000 மீன் குஞ்சுகளை விட்டாராம். அவை 6 அல்லது 8: அளவில் வளர்ந்துள்ளன. இன்னும் 2 அளவில் வளரும் என்று சொன்னார். குள்ள வாத்துகளும் பெரு வாத்துகளும் வளர்க்கிறார். அவைகளை எடுத்து என் கையில் வைத்தார். அவை பல நாள் பழகியவை போன்று என்னிடம் ஏதேதோ பேசின. என்ன மொழி என்று அறிய முடியவில்லை. கூர்ந்து நோக்கின. கூவின. பின் கீழிறங்கி உணவு - மர இலை . புல் முதலியவற்றை உண்டன. பக்கத்தில் பேரி, செரி, ஆப்பிள் முதலியன பயிரிட்டுள்ளனர். நல்ல ஒட்டுச்செடி, களை - 3 ஆண்டுகளில் பயன் தரு செடிகளை ஆய்ந்துநட்டுள்ளார். நன்கு எருவிடுகிறார், கலவை உரங்களை லாரியாகவும் மூட்டைகளாகவும் வாங்கி வைத்துள்ளார். ஒரு விவசாய - கிராமத்தான். எனவே எல்லா வகையிலும் அவர் தொழிற் படுகிறார். எனக்கு என் இளமையில் நான் வயல் வெளியில் சென்று செய்த வேலைகளும், உழவும், அறுவடையும் அறுவடைக்குப் பின் வயல்களில் வாத்துகள் மேயும் காட்சியும், ஒட்டுமாந்தோப்பின் காட்சியும்.பிறவும் என் கண்முன் நிழற் படம் போல வந்து சென்றன.