பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யேட்டல்.சான்பிரான்சிஸ்கோ 22.5.85 காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறிப்பு எழுதி முடித்தேன். இன்று இவர்கள் தோட்டங்களைச் சுற்றிக் காட்டி, பின் அருகில் காடு, மலை, நீர் வீழ்ச்சி முதலிய வற்றைக் காட்டுவதாகக் கூறியுள்ளனர். காலையில் ஏழு மணி அளவில் நான் இருந்த அறையினைச் சுற்றி நோக்கி னேன். எங்கும் பசுமை - கதிரவன் நன்கு தோன்றி மேலே எழும்பிக் கொண்டிருந்தான். நாற்புறமும் மலைகள்; இந்த மலைத் தொடர்களே மிகமிக விரிந்து, இந்நாட்டுக் கிழககுப் பகுதியைப் பிரிப்பனவாம். இடையிடையே நான் முன்னே கூறிய பனிமூடிய மலைகளும் முகடுகளும் உள்ளன. இதுவரை இந்நாட்டில் காணாத இயற்கைச் சூழலில் இன்று நான் என்னை மறந்தேன். பொதுவாக இந்நாட்டு மேலைப் பகுதி நல்ல இயற்கை நலம் சார்ந்தது எனக் கூறினார். • * காலைச் சிற்றுண்டிக்குப் பின் திரு. ஜெரி சட்லெஜ் அவர்கள் என்னைத் தன் பரந்த தோட்டத்தைக் காணுமாறு அழைத்துச் சென்றார். அவரே முயன்று எல்லா வேலை களையும் செய்கிறார். மொத்தம் 162 ஏக்கர் நிலம் பெற்றுள்ளார். இந்த ஊரின் பெயர்'இசாக்குவா (Issaquah) என்பதாகும். இதுவும் சியேட்டிலைப் போன்று, இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களின் (West Indians) குடிப்பெயர் ஒன்றின் அடிப்படையில் அமைந்தது எனக் கூறினார். மரம் அறுத்தல், உழுதல், நீர்ப்பாய்ச்சுதல் முதலிய எல்லா வேலை களையும் இவர் நன்கு கற்றுச் செய்கிறார். ஓய்வு பெற்ற