பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாஸ் ஏஞ்சலஸ் 25.5-85 363 (America Sings) என்ற ஒரு பலகையைப் பார்த்தேன். என்ன? ஊர் . நாடு பாடுகிறதா? நம் இலக்கண மரபில் கூறியபடி ஆகு பெயராக இருக்கும் என எண்ணிக் கொண் டிருந்தபோதே என் எதிரில் விதவிதமான கரடிகள் - பிற விலங்குகள் நாடகமாடத் தொடங்கிவிட்டன. பாடின . இனிய ஹார்மோனியம் போன்ற கருவிகளை வைத்துப் பாடத் தொடங்கின. அவற்றின் இசையும் நடனமும் கண்ணையும் கருத்தினையும் கவரும் வகையில் இருந்தன. அடிக்கடி அந்த நாடகக் காட்சி மாறி மாறி வந்தது. எத்தனையோ வகைக்காட்சிகள், அதைக்கான நான் இருந்த இடமே சுழன்றது. உலகம் சுழல்கிறது என்ற உண்மை அறிவேன் - இதோ சுழலுவதை நேரே பார்த்தேன். ஒரு வேளை உலகத்தைத் தாண்டி அண்ட கோளத்தில் நின்று அச்சுழற்சியைக் காண்கிறோமோ என்ற எண்ணமே உண்டாயிற்று. திடீரெனச் சுழற்சி நின்றது - பாட்டு நின்றது . ஆட்டம் காணோம். நான் திகைத்தேன். நாம் போகலாமா என்று குரல் கேட்டுத் திரும்பினேன். ஆம்! என்னைத்தான் செல்வி வீலா அழைத்துக் கொண்டிருந் தாள். என் நினைவு திரும்ப, திகைத்து நாற்புறமும் சுற்றிப் பார்த்தேன். நீங்க ளு ம் திகைக்கிறீர்களா! ஏதோ பயித்தியக்காரன் எங்கெங்கோ சென்று எதை எதையோ கண்டு உளறுகிறானே என்று; கவ்லை வேண்டாம். அமெரிக்கா வந்து லாஸ்ஏஞ்சலஸ் டிஸ்னிலேண்டில் நுழை யுங்கள். காலையில் திருமதி. உஷா அவர்கள் தாம் சொல்லியபடி தம் மூத்த மகளுடன் என்னை இந்த உலகத்துக்கு - நம் உலகத்துக்கு அப்பால் உள்ள உலகத்துக்கு - என்னை அழைத்து வந்து விட்டுச் சென்றமை உணர்ந்தேன். காலை 8.15க்கு இங்கே விட்டுச் சென்றார்கள். அப்போது தூறல் இருந்தது. குடையினையும் தந்து சென்றார்கள். இப்போது வெய்யில் கொளுத்துகிறது. அதற்கும் குடை பயன்படும். இந்த நாட்டில் இயற்கையும் மனிதனின் மனம் போல