பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம்.ஹாவாய் 28-5.85 383 நம் நாட்டு வீடுகளைப் போன்று இருந்தன. இப்பகுதி நம் பழங்கால வளமிக்க சோலை சூழ்ந்த சோழ நாட்டைஇன்றைய வரண்ட சோழ நாட்டை அல்ல-எனக்கு நினைவூட்டின. இதை எண்ணிக் கொண்டே அந்தக் கடைக்குள் புகுந்தோம். நியூயார்க் நகரிலோ-பால்டி மோரிலோ-வாஷிங்டனிலோ அன்றி வேறு எந்தப் பெரு நகரிலோ உள்ள அத்துணைப் பெரிய அளவில்-மக்கள் தேவைக்கான எல்லாப் பொருள்களையும் விற்பனைக்கு உரியதாய் வைத்து நின்றதைக் கண்டு வியந்தேன். இப்படியே இன்னும் இரு பெரிய கடைகள் இந்தப் பகுதி யிலும் வேறு கடைகள் தீவின் வேறுபகுதிகளிலும் உள்ளதாக அறிந்தேன். அத்தனையிலும் நன்கு வியாபாரம் ஆவதாக வும் கூறினர். இந்தத் தீவில் பழங்குடிமக்கள் சில காலத்துக்கு முன் வாழ்ந்ததாகவும் அவர்கள் தற்போது அருகிவிட்டதாகவும் அவர்கள் வழிபட்ட ஐந்து முக்கிய இடங்கள் இன்றும் உள்ளன எனவும் அறிந்தேன். நான் முன்னரே குறிப்பிட்ட படி, இப் பழங்குடி மக்கள் பழம் பெருந்தெய்வங்கள் நம் நாட்டு காளி, மன்னர்சாமி போன்ற தெய்வங்களை நினைவூட்டுவனவாக இருந்தன. முன் சியேட்டலை அடுத்த கிராமங்களில் கண்ட மக்கள் வாழ்க்கை முறை வழிபாட்டு முறை போன்றவற்றை இங்கும் காண முடிந்தது. அது போன்றே எங்கும் பசுமையும் குன்றுகளும் கானாறுகளும் காணப் பெற்றன. பிற்பகல் 2மணிநேர அளவில் இம்மடத்தின் முக்கிய துறவி ஒருவரோடு சமய உண்மைகள் பற்றியும் 1957ல் இந்த மடம் தோன்றிய வரலாறு பற்றியும் பேசினேன். பின் இருவருக்கும் வேறு பணி இருந்தமையின் நாளை தொடர நினைத்தோம். மாலை 6மணிக்கு வழிபாடு (முருகன்கோயில்) முடித்து உணவு உண்டு, சீக்கிரமே படுக்கச் சென்றேன்.