பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம்- ஹாவாய் 29.5.85 389 கட்டி இறைவனுக்குச் சாத்துவது, அனைவருக்கும் வேண்டிய உணவினைச் சமைப்பது, அவற்றிற்கு வேண்டிய சாமான்களை வாங்குவது, பாத்திரம் சுத்தம் செய்வது. மடத்தைத் துப்புரவு செய்வது போன்ற எல்லா வேலை களையும் இவர்களே. செய்யவேண்டும். இவற்றுடன் பழமையானவர்கள் முறைப்படி இறைவனுக்கு எட்டுவேளை பூசைகளையும் மாறிமாறிச் செய்யவேண்டும். இவற்றுடன் சமய ஆய்வு, நூல், மலர் வெளியீடுகள், பயிற்சி பெறுவோருக்கு பாடங்களைத் தயார் செய்வது, அச்சிடுவது (இங்கேயே அச்சகம் உண்டு) அஞ்சல் செய்வது போன்ற வற்றையும் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் இரண்டு நாட்களாகக் கண்ட நான், புறவேலைகளுக்கு வேறு தக்க வரை - இங்கே ஆள் கிடைப்பது கடினமாயினும் முயன்றால் பெறலாம் - நியமித்து, துறவியர் அனைவரும் சமய விசாரத்"தில் ஈடுபடுதல் நலமாகும் என்றேன். அப்பர் உழவாப் படை கொண்டு கோயில்களைத் தூய்மை செய்தார் என்றாலும், தற்போது சைவநெறிக்கு அதிகப் பணிகள் தேவை என்பதைச் சுட்டினேன். அப்பர் காலத்தில் உண்டான சமய வேறுபாட்டு அலை போன்ற இன்றும் தமிழ் நாட்டில் அலை வீசத் தொடங்கியதைச் சுட்டினேன். தேவையாயின் உலகெங்கணும் சென்று சமயநெறியைப் பரப்பவேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தினேன். அவர் களும் (சிலர்) இதுபற்றித் தலைவருடன் கலந்துபேசி தக்கன செய்யலாம் என்றனர். பின் 9.30க்கு அறைக்கு வந்தேன். இன்றுவரை எனக்கு வரவேண்டிய கடிதங்கள் (10.5-85-ல் சிகாகோவில் இட்டது உட்பட) வாராத நிலை யில் உள்ள அஞ்சல் துறையை நெடிது நினைத்தேன்; பின் சற்றே இருந்து, திருமடத்தில் தந்த ஆங்கில இதழ்களைப் படித்து 10-30 அளவில் உறங்கச் சென்றேன்.