பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த فلاها - ஹாவாய் 30-5-85 இன்று காலை முறைப்படி எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு, அன்பர் சொக்கலிங்கத்திடமும் குமார சுவாமி குருக்களிடமும் சமயம் பற்றிப் பல பொருள்களைப் பேசிக் கொண்டிருந்தேன். சுற்றிலும் இருந்த தோட்டத் தையும் சுற்றி வந்தேன். இங்கே உள்ள ஆலமரம், விழுது கள் விட்டு இறங்குகின்றதேனும் இலைகள் நம்நாட்டு ஆலமரத்து இலைகள் போல் இல்லை; மிகச் சிறியன. இது அதன் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஐந்நிறக் கிளி ஒன்று அருகில் வா என அழைத்தது. அதன் அருகில் சென்று: 'ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார்திருநாமம் தேர்ந்துரையாய்-ஆருரான் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவதுபோல் எம்பெருமான் தேவர்.பிரான் என்று சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அதுவும் பதிலுக்கு ஏதோ சொல் லிற்று. எனக்கு அந்த மொழி புரிந்தால்தானே. இறைவனைப் போன்று அது தெரிந்தும் தெரியாதது போல இருந்தது. பின் பலவிடங்களை நோக்கினேன். எங்கேயோ இருந்த மயில் எனைக் கண்டு ஓடி வந்தது. நான் கையில் வைத்திருந்த உணவுப் பொருளை அதற்கு இட்டேன். அது தோதை விரித்து ஆடிக்காட்டி, அச் சிறு உணவை உண்டது. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் அளித்த முன்னோரைப் போன்று நான் வள்ளல் இல்லையாயினும்