பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 ് "്ടി ു r്ക് இல்லற வாழ்வில் இருந்தே - உள்ளத் தூய்மையும் செயல் ஒழுக்கமும் வையம் வாழ வகைசெய்யும் பண்பும் பெறின் - கடவுளைக் காணலாம் என்று கூறி, பெரியபுராணத்தில், இல்லற நெறி நின்று இறைநிலையுற்ற அடியார்களைக் காட்டுகின்றனர். அத்தகைய இவர்தம் ஆற்றுப்படுத்தும் முறை சாலச் சிறந்ததேயாகும். - பின் எட்டுமணி அளவில் என்னுடன் நேற்று பேசிய கதிர் அடிகளார் மறுபடியும் பேச நினைத்தார். இந்த மடத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் பிறவற்றையும் நேற்றே தொட்டுப் பேசினோம். இன்றும் தொடர்ந்து இம்மடத்தின் விதிமுறைகள் பற்றியும் விளக்கி உரைத்தார். நானும் பண்டுதொட்டு, தமிழகத்தின் அறநிலையங்கள் வளர்ந்த நிலைபற்றியும் பிறவற்றையும் விளக்கி, உண்மைத் துறவிகள் இன்றேல் எந்த மடமும் ஏற்றமுறாது எனக் காட்டினேன். சைவசித்தாந்த நெறிபற்றியும் அதன் தொன்மை பற்றியும் விளக்கிய, சமயம் (Religion) தத்து வம் (Philosophy) தர்க்கம் (Logic) இவை மூன்றின் வேறு பாடுகளைக் காட்டி, இன்று நம் நாட்டில் சைவ சமயம்-இந்து சமயம் இருக்கின்ற நிலையில் தத்துவம், தர்க்கம் இவற்றைத் தள்ளிவைத்து, நம்பிக்கையின் அடிப்படையிலே அமைந்த சமயத்தையும் பக்தி, மார்க்கத்தையும் நாட்டு மக்களிடம் பரப்பவேண்டும் என விளக்கினேன். ஏழாம் நூற்றாண்டில் நிலைமாறிக் கிடந்த தமிழகத்தை அப்பர், சம்பந்தர் போன்ற நாயன்மார்களும் ஆழ்வார்களும் இந்த முறையைக் கையாண்டுதான் நம் சமய நெறிக்குக் கொண்டு வந்து வாழவைத்தனர் என்றும் அவர்களோடு திலகவதியார், மங்கையர்க்கரசியார் போன்ற மகளிரும் பங்கு கொண்டு சமயம் வளரப் பாடுபட்டனர் என்றும் அந்த நிலையில் இன்று இறைவனைப் பாடிப் பாடிப் பக்தியை வளர்த்து, மக்களை இணைத்துப் பிணைக்கவேண்டும் என்றும் கூறினேன். மாறாக பெளத்தம் தமிழ்நாட்டில் தலைதூக்கித் தனியரசு செய்த காலத்தில் சாத்தனார் சமயம் மறந்து,