பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ்-ஜினிவா 5-4-85 3i . . . f . - şi. . பழங்காலந் தொட்டு, இன்றுவரை உலக வரலாற்றைச் சிறப்பாக மத்தியதரைச் கடலை ஒட்டிய வரலாற்றை அறிய இவை உதவும் என எண்ணுகிறேன். 1911ல் நிறுவப் பெற்ற அன்ைத்துலகத் தொழிலாளர் நலத்துறைக் கழகம் இன்றும் சிறப்பாக இங்கே செயல்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடு கள் (League of Nation) &#15lb (1920-36)é, Géruául-L இடங்களும், வரலாற்று இடங்களாய்ப் போற்றப் பெறுகின் றன. நகரத்தெருக்கள் சில மேடு பள்ளமாக ஏறியும் இறங்கி யும் உள்ளன, மலைச்சரிவுகளில் பழங்காலத்தில் கட்டியவை இவை போலும். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பல நிறுவனங்கள் இங்கே உள்ளன. கால எல்லையைக் கடந்து வாழும் சில நகரங்களில் இதுவும் ஒன்று என்கின்றனர். 'ஜினிவா என்ற ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டேன், யாரும் விளக்க முன்வரவில்லை. நகரின் பலவிடங்களில் நம் ஊரைப்போன்றே காக்கை கள் பறக்கக் கண்டேன்; புறாக்களும் இருந்தன. மரங்கள் அனைத்தும், பனிக்காலமாதலால் எல்லா இலைகளும் உதிர்ந்து பட்ட மரங்களாகக் காட்சி அளித்தன. ஆங்காங்கே உள்ள சிலைகள் இங்கே ஆட்சி செய்த பல தலைவர்களை நினைவூட்டுகின்றன என்றனர். அவ்வப்போது அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் பற்றிய குறிப்புகளும் செதுக்கப் பெற்றன என்றனர். இங்கே 1781ல் நிறுவிய பல்கலைக் கழகம் செயல்படு கின்றது. இன்று விடுமுறையானதால். அனைத்தும், முடியிருந்தன. பல்கலைக்கழகக் கட்டிடத்தைச் சுற்றி நான்-மற்றவருடன் நடந்தே வந்தேன். அதை அடுத்த உயர்ந்த மதிற் சுவீர் ஒன்றும், அதன் புறத்தில் பல பெரும் தலைவர்தம் சிலைகளும் பிற உருவங்களும் உயர்ந்த நிலை யில் உள்ளன. பிள்ளைகள் விளையாடுதற்கென பரந்த நிலப் பரப்பு இருந்தது. அச் சாலைகளில் இன்று விடுமுறை யாத லால், பல காதலர்-முதியரும் இளையரும்-அணைந்தும் பிணைந்தும், தம்மை மறந்து உலாவந்து கொண்டிருந்தனர்.