பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 ஏழு நாடுக்ளில் எழுபது நாட்கள் கரையை 3200 கல் கடந்து அடையும். இடைமுழுதும் பரந்த பசிபிக் கடல் 5 மணி நேரம் வித்தியாசம். இடையில் நாள் மாறும் நிலையும் உண்டு. எனவே அமைதியாக இருந்தேன். போர்வை முதலியனவும் தந்தனர். தேவை இல்லை என்றாலும் அதைப் பலர் பயன்படுத்தி உறங்கினர். விமான்ம் பறந்து சென்ற காலை, நாள் மாறிய இடம் கடக்கும்போது, விமானி அந்த இடம் பற்றியும் நாம் ஒரு நாள் கடந்து விட்டோம் என்பதையும் உணர்த்தினார். நான் இப்படியும் சூரியன் கதி இல்லாமலேயே நாள் குறையும் நிலையினை எண்ணி என் வாழ்நாளில் ஒருநாள் குறைப்பட்டதே எனக் கவன்றேன். (உண்மையில் அந்த 24 மணியும் மேல்நோக்கிச் சென்ற பயணங்கள் வழி சரியாகப் போய்விட்டது என்றாலும் என் மனம் அமைதி யுறவில்லை) நல்ல உணவு, சிற்றுண்டி, பானங்கள், வறுத்த வேர்க்கடலை, பாதாம் இடையிடையே தந்து கொண்டே வந்தனர். படக் காட்சிகளும் இருந்தன. பிற்பகல் 2 மணி முதல் 4மணி வரை அனைவரும் உறங்கினர். விமானம் ஹானலூலூ மணிப்படி 6.25க்கும் டோக்கியோ மணிப்படி 1.25க்கும் விமான நிலையத்தில் இறங்கியது. மேலைப் பகுதியிலிருந்து கீழைப் பகுதிக்கு வந்த மகிழ்ச்சியில் திளைத்தேன். இன்னும் என் தாய்நாட்டிற்கும் எனக்கும் மூன்றுமணி இடைவெளியே உண்டு. இங்கிருந்து 6 மணி நேரத்தில் பம்பாய், தில்லியை அடையலாம். எனவே என் பயணம் இன்னும் 10 நாட்களில் நிறைவேறும் வகையில் மிக அண்மையில் திரும்பிவந்த நிலை நினைந்தேன். விமான நிலையத்தில் முறையான நாட்டு நுழைவுச் சான்றிதழ் முதலியன கண்டு, சாமான்கள் சோதனை சாலை (என்னைச் சோதனை இடவில்லை) கடந்து வெளியே வந்தேன். பிற்பகல் 2.30க்குள் மறுபடி 5-6-85வர ஹாங்காங்' போவதற்கும் பயண உறுதி செய்து, உந்துவண்டியில் நகர் நோக்கிப் புறப்பட்டேன். இதுவரையில் உதவிய ஆங்கிலம் இங்கே முற்றும் உதவாது என்பதை அறிவேன்; நேரில்